“கடுக்கா”திரைப்பட விமர்சனம்

கௌரிசங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி ஆகியோரின் தயாரிப்பில் முருகராசு இயக்கத்தில் விஜய் கௌரிஷ், சிமேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கடுக்கா”. திருப்பூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் பேருந்து நிற்குமிடத்தில் மிடுக்காக உடையணிந்து கொண்டு கதாநாயக்ன் கௌரிஷ் பேருந்தில் வரும் கல்லூரி மாணவிகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் என வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். அவர்களில் யாராவது ஒருவர் தன்னை காதலிக்க மாட்டார்களா? என்ற எக்கத்தில் தினமும் காலை வேலையில் பேருந்து நிற்குமிடத்துக் வந்து நிற்பதையே வேலையாக கொண்டிருக்கிறார்.த்கன் பிறகு வீட்டுக்குப்போய லுங்கி டி. சர்டை போட்டிக்கொண்டு பஞ்சாயத்து திண்ணையில் உட்கார்ந்திருக்கும் வயானவர்களுன் சீட்டு ஆடிக் கொண்டிருப்பார். அம்மாவின் உழைப்பில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கௌரிஷ்க்கு விளம்பர ஓவியம் வரையும் தனது நண்பன் ஆதர்ஷ் மதிகாந்துடன் சேர்ந்து நண்பனின் ஓசிக்காசில் மதுவருந்தி பொழுதுபோக்குவார். இந்நிலையில் கௌரிஷ் வீட்டுக்கு எதிர்வீட்டுக்கு சிமேஹா தனது தாய் தந்தையுன் புதுக்குடித்தனம் வருகிறார்கள். சிமேஹா திருப்பூர் கல்லூரியில் படித்து வருகிறார்.  கௌரிஷ் சிமேஹாவை பார்த்ததும் அவர்மீது காதல் கொள்கிறார் அவள் மறுத்தும் விடாமல் காதல் தொந்தரவு செய்கிறார். அதேபோல் கௌரிஷின் நண்பன் ஆதர்ஷும் சிமேஹாவை காதலிக்க அதற்கும் அவள் மறுக்கிறார். இந்த இருவரும் தனக்கு கொடுக்கும் காதல் தொந்தரவு தாங்காமல் இருவரிடமும் தனித்தனியாக சென்று நானும் உங்களை காதலிக்கிறேன். எனது கல்லூரி படிப்பு முடியும்வரை என்னை தொந்தரவு செய்யாமல் இருங்கள். படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று கூறிவிடுகிறாள். அவளது படிப்பு முடிவத்ற்கு முன்பாகவே சிமேகாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. நாளைக் காலையில் திருமணம். இன்று இரவு சிமேஹா காணாமல் போய்விடுகிறள். அவளை விஜய் கௌரிஷும் ஆதர்ஷும்தான் கடத்யியிருப்பார்கள் என்று போலீசார் விசாரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கடத்தவில்லை என்று விசாரணையில் தெரியவருகிறது. அப்படியானால் மணப்பெண் சிமேஹா எப்படி எங்கே காணாமல் போனாள்?. என்ன ஆனாள்?. யார் கடத்தியது? கல்யாணம் செய்துகொள்வதாக கூறிய இவர்களில் ஒருவரை கல்யாணம் செய்துகொண்டாளா? அல்லது அனைவருக்கும் கடுக்கா கொடுத்தாரா? என்பதுதான் கதை. இதில் நடித்த அனைவரும் புதுமுகங்கள்தான். எவ்வித ஆர்ப்பாட்டமும் அரிதாரபூச்சும் ஒப்பனையும் இல்லாமல் சிறிதும் சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை கொடுத்து நடித்திருப்பதால் சிரித்தும் ரசித்த்கும் படம் முழுக்க ஆவலுடன் பார்க்க முடிந்தது. நடிகர்களின் முகத்தைப்பார்த்த்தாலே பார்வையாளர்கள் சிரித்து விடுவார்கள். கிராமங்களில் இயல்பாகவே நடக்கும் காட்சிகளையே திரைப்படமாக தயாரித்திருக்கும் இயக்குநர் முருகராசுவுக்கு திரைய்லகின் எதிர்காலம், தன் வாசலை திறந்து வைத்திருக்கிறது. *******