(தங்க முகையதீன்)
ஹரி ஹரசுதன் தயாரிப்பில் கே.சுதன் இயக்கத்தில் சாய்ஶ்ரீ பிரபாகரன், பாவ்ரெல் நவகீதன், சீது குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மரியா”. இளம் வயதியிலேயே கன்னியாஸ்திரியாக்கப்பட்ட சாய்ஶ்ரீ பிரபாகரன் விடுமுறை நாள் ஒன்றில் தனது சிறுவயது தோழியை காண சென்னைக்கு வந்து அவளுடன் தங்குகிறாள். அவர்களிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வேறொரு இரு காதல் ஜோடிகளும் இருக்கிறார்கள். அக்காதலர்கள் செய்யும் சரச சல்லாபங்களைப் பார்த்து கன்னியாஸ்திரியாக இருக்கும் சாய்ஶ்ரீக்கும் காம உணர்வு வெளிப்படுகிறது. அந்த இயற்கையின் உபாதையை ரசிக்கிறாள் சாய்ஶ்ரீ. கன்னியாஸ்திரி வாழிவிலிருந்து விடுபட்டு மற்றப் பெண்களைப்போல திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்படுகிறாள். ஆனால் அவளது தாய், மகளின் மனமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கன்னியாஸ்திரி வாழ்க்கை என்பது ஆண்டவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்கின்ற வாழ்க்கை. அது எல்லோருக்கும் கிடைக்காது. உனக்கு கிடைத்திருக்க்றது. கன்னியாஸ்திரியாகத்தான் நீ வாழ வேண்டுமென்று தாய் சொல்ல, அதை ஏற்க மறுக்கிறார் சாய்ஶ்ரீ. அதனால் கோபமடைந்த தாய், சாய்ஶ்ரீயை வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுகிறாள். அதனால் மீண்டும் சென்னைக்கு சென்று தனது தோழியின் வீட்டிலேயே தங்குகிறாள். ஒருநாள் காமம் தலைக்கேறிய் சாய்ஶ்ரீ தனது தோழியின் காதலனோடு உறவு கொண்டிருக்கும் காட்சியை தோழியும் பார்த்து விடுகிறாள். அதனால் சாய்ஶ்ரீயை அடித்து உதைத்து வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுகிறாள் தோழி. இதைப்பயன்படுத்தி சாத்தாவழியை பின்பற்றும் பாவ்ரெல் நவநீதன், சாய்ஶ்ரீக்கு மூளைச் சலவை செய்து சாத்தானின் வழிநடக்க சொல்கிறார். சாய்ஶ்ரீ எதை பின்பற்றினாள் என்பதுதான் கதை. இளமையின் துடிப்பையும் காம உணர்வையும் தன் மெல்லிய இதழில் வெளிப்படுத்தும் சாய்ஶ்ரீயின் நடிப்பு மெச்சத்தகுந்தது. இந்த கதாபாத்திரத்தை துணிச்சலாக சம்மதித்து நடித்திருக்கிறார். படத்தின் மொத்த கதையையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் சாய்ஶ்ரீ. சைத்தானின் போதனைகளை மூச்சுவிடாமல் போதனை செய்யும் பாவ்ரேல் நவநீதனின் குரல்வளம் நன்றாக இருக்கிறது. நல்லவேளையாக சைத்தானின் போதனைகளில் பெரும்பான்மையான வசனங்களை ஆங்கிலத்துலேயே சொல்லி முடித்துவிட்டார். ஆங்கிலம் புரியாதவர்கள சைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து தப்பித்துவிட்டார்கள். கதைக்கு முன்னுரை எழுதிய இயக்குநர் கே.சுதன் முடிவுரையை எழுத குழம்பியிருக்கிறார்.