கே.ஜே.பி டாக்கீஸ் தயாரிப்பில் பிரியா பவானி சங்கர் – ஷில்பா, பிரிகிடா சாகா, அஷ்வின் குமார், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர், விக்னேஷ் கார்த்திக், கே.ஜே. பாலமணிமார்பன், பவானி ஸ்ரீ, சஞ்சனா திவாரி, தம்பி ராமையா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹாட் ஸ்பாட் 2”. முதல் பாகம் மாதிரியே இந்த படமும் “ஒரு இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்றார்”. சமூகத்தில் பேசத் தயங்குகின்ற விஷயங்கள், ரசிகத்தமையின் வெறி, பெண்ணின் சுதந்திரம், நாகரிகம் – மரியாதை, தலைமுறை இடைவெளி, காதல் வரை எல்லாவற்றையும் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்புடன் கலந்து சொல்கின்ற முயற்சி. விஜய், அஜித் ரசிகர்களின் வெறியை மையமாக்கிய கதையில், அந்த வெறி எந்த அளவுக்கு போகிறது, அது வாழ்க்கையை எப்படிச் சீரழிக்கிறது என்பதை எம்.எஸ். பாஸ்கர் தன் மிரட்டலான நடிப்புல அழுத்தமாக காட்டுகிறார்கள். ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன் மாதிரியான இளைஞர்கள் “பட்டும் திருந்தாத ரசிகர்கள்” மாதிரி நடித்திருப்பது கவனிக்க வைக்கிறது. என் உடை, என் சுதந்திரம்’என்று பேசுகின்ற சிந்தனை, கல்யாணத்திற்கு முன்னாள் ஆண் பெண் எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்களை சஞ்சனா திவாரி, தம்பி ராமையா அத்தியாயம் வழியாக தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். அந்த அப்பா–மகள் உறவுல இருக்குற சங்கடம், சமூக அழுத்தம் எல்லாம் ஓரளவுக்கு வேலை செய்கிறது. 2050ல் இருக்கின்ற பெண், 2025ல் இருக்கின்ற இளைஞன் தொலைபேசியில் பேசுற காதல், டைம் டிராவல், எதிர்பாராத திருப்பம் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அஸ்வின் குமார், பவானி ஸ்ரீ இந்த பகுதியில் கொஞ்சம் புது தெம்பு தருகிறார்கள். பிரியா பவானி சங்கர் படத்தோட முதுகெலும்பு மாதிரி. ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே, கண்களாலேயே கதை சொல்லி ரசிக்க வைக்குறார். அவருக்கு எதிரில் தயாரிப்பாளராக வரும் பாலமணிமார்பனின் நசிப்பும் நகைச்சுவையையும் கொஞ்சம் விவகாரமான வேடத்தில் வந்து கவனம் ஈர்க்குறார். சதீஷ் ரகுநாதனின் பின்னணி இசை ஒவ்வொரு கதையின் உச்சக்கட்ட காட்சியில் நல்ல ஊக்கம் தருகிறது. ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் படம் இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே முடிவுபெற உதவியிருக்கிறது. முதல் பாகத்தோட ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த பாகம் அந்த அளவுக்கு தாக்கம் தரவில்லை என்று தோன்றலாம். ஆனால் இதை தனியாக ஒரு படமாக பார்த்தால், சமூக கருத்துகளை ஓரளவு அழுத்தமாக சொல்லி, நகைச்சுவையையும் கலந்து கொடுத்திருக்குறார்கள்.
“ஹாட் ஸ்பாட் 2” திரைப்படம் விமர்சனம்
