தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இந்திரா”. தொடர் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் வசந்த் ரவி, சுனில், மெஹ்ரீன் பீர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ் குமார. ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வசந்த் ரவி பேசியதாவது: “இந்திரா படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம். சபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் முடித்து வரும் வரை, படத்தில் உழைத்த அனைவரும் ஒரே உணர்விலிருந்தோம். படம் மிக அழகாக வந்துள்ளது. மெஹ்ரீன் நிறையத் தெலுங்கு படம் செய்துள்ளார் இந்த கதாபாத்திரம் அழுத்தமானது எப்படிச் செய்வார் என்று நினைத்தோம் ஆனால் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்.*******
சுனில் சார் பற்றிச் சொல்லத் தேவையில்லை, அவர் தெலுங்கில் பண்ணாத ரோலே இல்லை, ஆனால் இது கண்டிப்பாக அவருக்கு வித்தியாசமான ரோலாக இருக்கும். அவர் மாதிரி ஒரு ஹம்பிளான மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் மாதிரி இந்த ரோலை யாருமே செய்திருக்க முடியாது. டிரைடண்ட் ரவி சார் உள்ளே வந்த போது, எல்லோருக்குமே பெரிய நம்பிக்கை வந்தது அவருக்கு நன்றி. ஜாஃபர் சகோதரருக்கு நன்றி. என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்க வேண்டும் என நினைத்துத் தான் செய்கிறேன். தரமணி, ராக்கி, ஜெயிலர் மாதிரி இந்திரா முக்கியமான படமாக இருக்கும். இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரில்லராக இருக்கும். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், எல்லோரும் தியேட்டரில் வந்து பாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் பேசியதாவது… “பொதுவாகக் கதை சொன்னால் அடுத்துக் கூப்பிடுகிறோம் என்று தான் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள் ஆனால் சபரீஷ் கதை சொல்லி ஒரு வாரத்தில் நாங்கள் ஷூட்டிங் போய்விட்டோம், அந்தளவு இந்தப்படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. சபரி, இர்ஃபான் எல்லோருமே முழு உழைப்பைப் போட்டுள்ளார்கள். எல்லோருமே தங்கள் படம் போல உழைத்துள்ளனர். எல்லோருமே நேசித்து உழைத்துள்ள படம். இந்தப்படம் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது அந்த உறுதியை என்னால் தர முடியும் கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சபரீஷ் பேசியதாவது…. எனக்கு இந்தப்படம் தந்ததற்குத் தயாரிப்பாளர் ஜாஃபர் மற்றும் இர்ஃபான் சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், என் இயக்குநர் குழு எல்லோருக்கும் நன்றி. 11 வருடங்கள் முன்பு ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன், அப்போதிலிருந்து இந்த படத்திற்காக உழைத்து வருகிறேன். ஆகஸ்ட் 22 உங்கள் பார்வைக்கு வருகிறது. இப்படத்திற்காக எல்லோரும் உழைத்திருக்கிறோம். நான் திரில்லர் பட ரசிகன் அதனால் தான் திரில்லர் படம் செய்தேன். வசந்த் ரவி சார் திரில்லர் படம் நடிப்பதில்லை எனும் மூடில் இருந்தார், ஆனால் என் கதை கேட்டு நடிக்க வந்தார். கண்டிப்பாக நீங்கள் அனைவரும் ரசிக்கும் படைப்பாக இப்படம் இருக்கும் நன்றி.
நாயகி மெஹ்ரீன் பேசியதாவது… நான் மும்பையிலிருந்த போது, சபரீஷ் சார் போன் செய்து, முழுக்கதையும் சொன்னார். அவர் அறிமுக இயக்குநர் ஆனால் அவரிடம் பெரும் தெளிவு இருந்தது. மிக அழகாகக் கதை சொன்னார். அதே போல் படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். இப்படத்தில் நடித்தது மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது. கயல் கதாப்பாத்திரம் மிக சவாலாக இருந்தது. எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான ரோல், வசந்துடன் வேலை பார்த்தது மிக இனிமையான அனுபவம். அவர் தான் டயலாக் எல்லாம் சொல்லித் தந்தார். அவர் இயற்கையாகவே மிக நல்ல நடிகர். எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்ட தயாரிப்பாளருக்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தொழில் நுட்ப குழு தயாரிப்பு நிறுவனம் – JSM Movie Production, Emperor Entertainment தயாரிப்பாளர்கள் – ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் விநியோகம்: Trident Arts – ரவீந்திரன் (தமிழ்நாடு திரையரங்க உரிமைகள் எழுத்து இயக்கம் – சபரீஷ் நந்தா ஒளிப்பதிவு – பிரபு ராகவ் இசை – அஜ்மல் தஹ்சீன் எடிட்டர் – பிரவீன் KL தயாரிப்பு வடிவமைப்பாளர் – சூர்யா ராஜீவன் ஸ்டண்ட் – விக்கி ரீ-ரிக்கார்டிங் மிக்சர் – ராம்ஜி சோமா ஒலி வடிவமைப்பு – கிருஷ்ணன் சுப்ரமணியன் ப்ரோமோஷன் – வசுமதி (The Roadmap) மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் S2Media