ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ், செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவான ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிக சிவா பேசியதாவது: “இயக்குநர் ராம் நம் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம். எனக்காக நிகழ்வுக்கு வந்த மிஷ்கிம் சாருக்கும் நன்றி. நிச்சயம் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்”. நடிகை அஞ்சலி, “சில படங்களும் அதன் கதாபாத்திரங்களும்தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். எனக்கு ‘பறந்து போ’ அப்படியான படம். வனிதா கதாபாத்திரம் நிச்சயமாக அனைவர் மனதிலும் நிற்கும். ராம் சார் ஸ்டைலில் ஒரு கமர்ஷியல் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் ‘பறந்து போ'” என்றார். நடிகை கிரேஸ், “ராம் சாருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார்” என்றார்.******
நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, “இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை! எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து விட்டேனே என்று பொறாமையாக இருக்கிறது. அற்புதமான படைப்பாளி ராம். இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்” என்றார்.