“பறந்து போ” திரைப்பட விமர்சனம்

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பி வெளி வந்திருக்கும் படம் “பறந்து போ”. சிவாவும் கிரேஸ் ஆண்டனியும் மதக் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்களின் எதிர்ப்புக்கு ஆளாகி தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு 8 வயதில் மிதுன் இருக்கிறான் மகனை கஷ்டமில்லாமல் வளர்க்க சிவா அனேக இடங்களில் கடன் வாங்குகிறார். அதனால் மாத்த்தவணை கட்ட முடியாமல் மிகவும் சிரம்பப்படுகிறார். கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து ஓடி ஒழிகிறார். மனைவி கிரேஸ் ரு துணிக்கடையில் வெலை பார்க்கிறார். மகன் மிதுனை வீட்டுக்குள்  வைத்துவிட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவ்டுகிறார்கள். வீட்டுக்குள் இருக்கும் மகம் மிதுன் வெளியுலகேமே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே மடிக்கணணி மூலம் பாடசாலை படிப்பை படித்து வருகிறான். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து மகனை யாருக்கும் தெரியாமல் கூட்டிக் கொண்டு சிவாவும் கிரேஸ்சும் வெளியே சென்று விடுகிறார்கள். வெளியுலகத்தைப்பார்த்த சிறுவன் மிதுன் மிகவும் மகிழ்ச்சியடைகிறான். அவர்கள் போகுமிடமெல்லாம் பல மனிதர்கள் மூலமாக வெவ்வேரு அனுபவத்தை அன்பவிக்கிறார்கள். வாழ்க்கை இனிமையானது என்று உணர்கிறார்கள். இப்படி வெளியுலகத்தில் பறந்து சென்ற அவர்களின் வாழ்க்கை எங்கு முற்று பெறுகிறது என்பதுதான் கதை. இயக்குநர் ராம் இப்படத்தின் மூலம் வாழ்க்கை என்பது எது என்பதை விளக்கியிருக்கிறார். உச்சக்கட்ட காட்சியை காட்சிப்படுத்தாமல் வசனநடையில் முடித்திருக்கிறார். படம் முழ்வதும் சளிப்பு தட்டாமல் திரைக்கதையை ஓட்டியிருக்கிறார். குடுப்பத்துடன் சென்று பார்க்க வெண்டிய படத்த தந்த இயக்குநர் ராம் பாராட்டத்தகுந்தவர். சிவா நமைச்சுவையின் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடித்துள்ளார். நடித்த அனைவரும் தங்களது கதாபாத்திரங்களாகவே திரையில் வாழ்ந்துள்ளார்கள். ஒளிப்பதிவ்ம் இசையும் படத்துக்கு மிக்க பக்கபலம்.