ஜே.எஸ்.கே. நிறுவனம். சார்பாக தற்போது, 2023ம் ஆண்டு தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது. எஸ்.கே.ஜீவா இப்படத்தை இயக்குகிறார். ஜேஎஸ்கே, பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திர சேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் ரோஷன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். குற்றம் கடிதல்-2 படம் கதையானது, ஒரு ஓய்வு பேரும் தருவாயிலுள்ள 60 வயது நிரம்பிய பாடசாலை ஆசிரியருக்கு மத்திய அரசாங்கம் “நல்லாசிரியர்” விருதை அறிவிக்கிறது. அதனைத் தொடர்ந்து, அவர் வாழ்கையில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெறுகிறது. இச்சம்பவங்களை எவ்வாறு எதிர் கொள்கிறார்? அந்த சம்பவம் என்ன? என்பது போன்ற அடுக்கடுகான திருப்பங்களுடன் அனைவர் மனதிலும் பதியும் வகையில் ஒரு வலுவான உச்சக்கட்ட காட்சியுடன் இப்படம் இருக்கும்.******
படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடங்களின் விவரங்கள் தமிழகமெங்கும் பல பகுதிகளிலும், கேரளாவிலும் நடத்தப்படவுள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பு – ஜேஎஸ்கே. சதீஷ் குமார் எழுத்து & இயக்கம் – எஸ்.கே.ஜீவா திரைக்கதை – எஸ்.கே.ஜீவா & ஜே.எஸ்.கே இசை – டி.கே படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார் ஒளிப்பதிவு – சதீஷ்.ஜி சண்டை பயிற்சி மாஸ்டர் – மகேஷ் மேத்யூநடனம் – மானஸ் பாடலாசிரியர் – ராஜா குருசாமி தயாரிப்பு நிர்வாகி – ப.ஆறுமுகம் வடிவமைப்புகள் – சிந்து கிராஃபிக்ஸ் – பவன்குமார் ஜி சுவரொட்டிகள் – நந்தா வண்ணக்கலைஞர் – ஆர்.நந்தகுமார் DI & VFX – வர்ணா டிஜிட்டல் ஸ்டுடியோ ஆடியோகிராபி – ராஜா நல்லையா மக்கள் தொடர்பு – ரேகா (Raan T Art)