ஹால் திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கும் தயாரிப்பு நிறுவனம்

காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் மனதை மகிழ்விக்கும் தருணங்களை அழகாக இணைக்கும் ஒரு புதுமையான பொழுதுபோக்கு நிறுவனத்தை அபிமன்யு துவங்கப்பட  தயாரிப்பு, விநியோக நிறுவனம் தமிழில் முதல் முறையாக ஹால் திரைப்படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளது. ஜூபி தாமஸ் தயாரிப்பில், ஷேன் நிகம் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள இந்த ஹால், படத்தின் மூலம் வீரா இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு வி. நந்தகோபன் இசையமைக்கிறார்.******

இந்த நிறுவனம் இதற்கு முன், கேரளாவில் ப்ளாக்பஸ்டர் “குடும்பஸ்தன்” படத்தை வெற்றிகரமாக விநியோகித்து, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஹால் படத்தின் மூலம், உணர்வுகளை மையமாகக் கொண்ட அர்த்தமுள்ள சினிமாவை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் தனது பயணத்தை The Madras Story தொடர்ந்து வருகிறது.