“மாமன்” திரைப்பட விமர்சனம்

கே.குமார் தயாரிப்பில் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வரியா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மாமன்” சூரியன் அக்கா சுவாசிகாவுக்கு திருமணம் ஆகி 10 வெருடங்களுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கிறார். குடும்பத்தினர் மீது குறிப்பாக அக்கா மீது அதிக் பாசம் கொண்ட சூரி மருமகன் பிறந்ததிலிருந்து அவனுக்கு 5 வயதாகும்வரை ஒரு தாயைப் போல் பராமரித்து வருகிறார். குழந்தை பாடசாலைக்கு செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் சிறுவன் பிரதீப்புடன் தான் தன் நேரம் முழுவதையும் கழிக்கிறார். மாமன் சூரியைவிட்டு குழந்தை பிரிவதே இல்லை. சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஐஸ்வரியா லட்சுமிக்கு சூரிமீது காதல் ஏற்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சூரி ஐஸ்வரியா லட்சுமியின் முதலிரவிலும் சிறுவன் மாமாவுடன்தான் படுப்பேன் என்று அடம்பிடித்து இருவருக்கும் இடையில் படுத்துக் கொள்கிறான். இது பல நாட்கள் நடப்பதால் இருவரும் தாம்பத்திய உறவு இல்லாமல் தவிக்கிறார்கள். இரு கட்டத்தில் சூரி மீது வெறுப்பு ஏற்பட்டு ஐஸ்வரியா லட்சுமி சூரியை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். பிரிந்த தம்பதிகள் என்ன ஆனார்கள்? என்பதுதான் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை. அக்காவுக்கு குழந்தை பிறந்த சந்தோஷ்த்திலும் மருமகனுக்காக மனைவியை பிரிந்த துக்கத்திலும் சூரியின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. நகைச்சுவையாளனாகவே சூரியை பார்த்த ரசிகர்கள் இப்படத்தில் பாசமிகு குடும்பத்தலைவனாக பார்த்து ரசிப்பார்கள். முற்றுலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்து திரைவானில் துருவ நட்சத்திரமாக மின்னுகிறார். தனது திருமணநாளில் தாத்தா ராஜ்கிரண் அக்கா சுவாசிகா, மனைவி ஐஸ்வரியா லட்சுமி உள்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் துள்ளாட்டம் போட்டு ஆடும் ஆட்டம் திரையரங்கில் ரசிகர்களையும் ஆட வைக்கிறது. அப்படி ஒரு இசையையும் நடனத்தையும் தந்திருக்கிறார்கள் இசையமைப்பாளர் கேஷம் அப்துல் வஹாப்பும் நடன் இயக்குநரும். தாத்தா ராஜ்கிரணும் பாட்டி விஜி சந்திரசேகரும் ஒருவருக்கொருவர் பாசத்தை காட்டுவதிலும் குழந்தைதனத்துடன் நடித்திருப்பதும் பாராட்டும்படியும் ரசிக்கும்படியும் உச்சக்கட்டத்தில் கண்ணில் நீர் சுரக்கும்படியும் நடித்திருப்பது பாராட்டும்படியுள்ளது. கதையை எழுதிய நடிகர் சூரி, தன் மண்ணுக்கேற்ற பாசத்தை வெளிக்காட்டியுள்ளார். (மதுரகாரங்க பாசகாரங்க). கணவன் மீது கோபிப்பதிலும் பிறகு சமாதானமாகி புன்முறுவல் செய்வதிலும் ஐஸ்வரியா லட்சுமி கைத்தட்டலை பெறுகிறார். உச்சக்கட்ட காட்சியில் அக்கா சுவாசிகா பெண் வீட்டாரிடம் கெஞ்சுகின்ற காட்சியில் அற்புதமாக நடித்துள்ளார். ஒவ்வொரு குடும்பமும் சென்று பார்க்க வேண்டிய படத்தை இய்க்கியுள்ள இயக்குநர் பிரசாத் பாண்டியராஜ்,  படத்தொகுப்பாளர்கள் கணேஷ் சிவராத், ஜி.துரைராஜ் ஆகியோர் திறமையாக பணியாற்றியுள்ளார்கள்.