தாயின் பெருமை சொல்லும் “அம் ஆ” திரைப்படம் ஏப்.18ல் வெளியீடு

காபி புரடெக்‌ஷன் தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், உருவாகியுள்ள மலையாளப் படம்  “அம் ஆ”.  இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் திலீஷ் போத்தன், தேவதர்ஷினி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு, முத்துமணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ்சியம்மா, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃபேல், சதீஷ் கே குன்னத், அம்பிலி ஓசெப், கபானி ஹரிதாஸ், சினேகா அஜித், லேதா தாஸ், ரேமாதேவி, கே.கே.இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமுய்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.******

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்த்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற , படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  மலையாளத்தில் வெளிவந்து பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ள இப்படம்,  திரையரங்குகளில் 60 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் இப்போது தமிழில் வரவுள்ளது.

ஒரு தாயின் பாசத்தை பேசும் இப்படத்தில், தமிழ் நடிகை தேவதர்ஷினி தாயாக, மிக அழுத்தமான பாத்திரத்தில் அற்புதமான  நடிப்பை வழங்கியுள்ளார். இதுவரையிலும் காமெடியில் கலக்கிய இவர், இப்படத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார்.  ஸ்டீபன் எனும் ரோட் காண்ட்ராக்டர்,  கவந்தா எனும்  ஒரு மலை கிராமத்திற்கு செல்கையில், அங்குள்ள ஒரு தாயையும், மகளையும் அவர்களோடு மாறுபட்ட மனிதர்களையும் சந்திக்கிறார். அவர்களின் அன்பு சூழ்ந்த வாழ்க்கை, அவரை நெகிழ வைக்கிறது. மனிதர்களின் அன்பை, அழகாகப் பேசும் ஒரு அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்  இயக்குனர்: தாமஸ் செபாஸ்டியன்  எழுத்தாளர்: கவிபிரசாத் கோபிநாத் தமிழ் மொழி மாற்ற எழுத்தாளர்  :- எஸ்.ஆர்.வாசன்  ஒளிப்பதிவு : அனிஷ்லால் ஆர்.எஸ் இசையமைப்பாளர்: கோபி சுந்தர்  எடிட்டர்: பிஜித் பாலா  கலை இயக்குனர்: பிரசாந்த் மாதவ்  ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி  காஸ்ட்யூம் : குமார் எடப்பல்  கலரிஸ்ட்: சிபி ரமேஷ், கலர்பிளானெட் ஸ்டுடியோஸ் கொச்சி  பாடலாசிரியர்கள்: பாபுராஜ் களம்பூர், சத்தியவேழன்  ஸ்டில்ஸ் : சினாட் சேவியர்  ஸ்டண்ட் : மாஃபியா சசி  ஒலி கலவை: கருண் பிரசாத், சவுண்ட் ப்ரூவரி கொச்சி  முதன்மை இணை இயக்குனர்: கிரீஷ் மாரார் தயாரிப்பு மேற்பார்வை : கிரீஷ் அதோலி  மக்கள் தொடர்பு : கேப்டன் ஆனந்த்