துபாயில் கண்ணன் ரவி நிறுவனத்திற்கு சொந்தமான புதிய பொழுதுபோக்கு மையமான “பாந்தர் கிளப்”பை ஷாருக் கான் திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, துபாயின் நைட்லைஃப் வரலாற்றில் முக்கியமான தருணமாக மாறி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் உச்சமாக அமைந்தது. இந்நிறுவனம் துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.******
கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group), வணிகம், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality), பொழுதுபோக்கு மற்றும் லக்ஷரி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. தரமான சேவை, நவீன அணுகுமுறை மற்றும் சர்வதேச தரத்திலான நிர்வாக முறைகள் ஆகியவற்றின் மூலம், இந்த குழுமம் துபாயின் வளர்ந்து வரும் வணிக சூழலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் தமிழ் திரையுலகிலும் கால்பதித்து பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது.
Marriott Marquis Dubai Creek வளாகத்தில் அமைந்துள்ள Panther Club, கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோரின் முன்னெடுப்பில் உருவாகியுள்ளது. அவர்களது அழைப்பை ஏற்று, நெருங்கிய நண்பரான பாலிவுட் கிங் கான் ஷாருக் கான் இந்த கிளப்பை திறந்து வைத்தார். அவரது வருகை நிகழ்விற்கு கூடுதல் சிறப்பையும் பெருமையையும் சேர்த்தது.

