“டென் ஹவர்ஸ்” திரைப்பட விமர்சனம்

லதா பாலு தயாரிப்பில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ, கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் ஐயப்பா, முருகதாஸ், ஷாருமிஷா, நிரஞ்சனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டென் ஹவர்ஸ்”. சிபிராஜ் நேர்மையான காவல்த்துறை ஆய்வாளர்.  தன் மகளை காணவில்லை என்று ஒரு முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அப்பெண் இரவு நேரத்தில் ஒரு தனியார் பேருந்தில் பயணப்பட்டார் என்று சிபிராஜுவுக்கு தகவல் வருகிறது. அந்த பேருந்து நெடுஞ்சாலையின் ஓரத்தில் தனியாக நிற்கிறது. அப்போருந்தில் ஒருவர் கொல்லப்பட்டு கிடக்கிறார். அவர் எதற்காக கொல்லப்பட்டார்?. அதே பேருந்தில் பயணப்பட்ட இளம்பெண் என்ன ஆனார்? என்பதை 10 மணி நேரத்தில் கண்டுபிடிப்பதுதான் கதை. திரைவானில் மங்கிய நட்சத்திரமாக இருக்கும் சிபி சத்தியராஜ், இப்படத்தின் மூலம் பிரகாசிக்க கடினமாக உழைத்திருக்கிறார். காவல்த்துறை காட்சிகளை குறைத்திருக்கலாம். கே எஸ் சுந்தர மூர்த்தியின் இசையும் ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக உதவியிருக்கிறது. உச்சக்கட்டக் காட்சியை விறுவிறுப்பாக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்.