பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வாழ்க்கை வரலாற்று நூலை “லைக்கா” குழுமம் வெளியிட்டது.

இலங்கையின் முன்னணி தமிழ்க் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின்  வாழ்க்கை வரலாற்றை ஆவணமாகக் கொண்ட ஆங்கில நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரேமா சுபாஸ்கரன், மற்றும் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி  ஜி. கே. எம். தமிழ் குமரன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் இசையில் உருவான “தப்பெல்லாம் தப்பே இல்லை” பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 27 ஆண்டு காலமாக கலை,இலக்கியம், ஊடகம் ,மற்றும் சினிமா துறையில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்திருக்கும் பொத்துவில் அஸ்மின் . நடிகர் விஜய் ஆண்டனியின் நான் திரைப்படத்தில்  “தப்பெல்லாம் தப்பே இல்லை” என்ற பாடலின் ஊடாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.*******

“விடியலின் ராகங்கள்”, “விடை தேடும் வினாக்கள்”, “பாம்புகள் குளிக்கும் நதி” ஆகிய கவிதை நூல்களை தமிழுக்கு தந்துள்ளார். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைவாக கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்த  “கலைஞர் 100 கவிதைகள் 100” கவிதை தொகுப்பிலும் இவரது கவிதை இடம்பெற்றுள்ளன. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இவர் எழுதிய இரங்கல் பாடல் “வானே இடிந்ததம்மா” அவரது சமாதியில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் ஒலித்தன. பொத்துவில் அஸ்மின் எழுதிய ” “ஐயோசாமி நீ எனக்கு வேணாம்”  பாடல் இலங்கையில் உருவாக்கப்பட்ட தமிழ் பாடல்களில் அதிக பார்வைகளை பெற்ற முதல் தமிழ் பாடலாகும்.

இலங்கையில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் 30 மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கும் பொத்துவில் அஸ்மின் கம்போடியா கலை கலாசார அமைச்சினால் “சர்வதேச கவியரசு கண்ணதாசன்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர். பொத்துவில் அஸ்மின் வரிகளில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் “முல்லை சசி” குரலில் ஸ்ரீதர்மாஸ்டர்,   காயத்ரிசான் நடிப்பில்   வெளியான “முட்டக்கண்ணி”  ஆல்பம் பாடல், அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச பாடலாசிரியர் சங்கம் (ISSA) வழங்கும் 2025ஆம் ஆண்டுக்கான விருதுக்கு சர்வதேச மட்டத்தில் சிறந்த வீடியோ பாடல் மற்றும் சிறந்த பாடலாசிரியர் என இரு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆங்கில வாழ்க்கை வரலாற்று நூல், பொத்துவிலிலிருந்து உலகளாவிய தமிழ் குரலாக உயர்ந்த அஸ்மின் அவர்களின் பயணத்தை ஆவணப்படுத்துவதுடன், தமிழ் இலக்கியம் மற்றும் கலைத் துறையில் அவரது தாக்கத்தையும் பதிவுசெய்கிறது.