இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” -படத்தின் வெளியீடு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் பதாகையை 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.******
இத்திரைப்படத்தின் தமிழ் பதாகையை அட்லீயும், தெலுங்கு பதாகையை விஜய் தேவரகொண்டாவும் , ஹிந்தி பதாகையை கரண் ஜோர்ரும் வெளியிட்டனர். மலையாளத்தில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வெளியீட்டு தேதி பதாகையை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு: ஒளிப்பதிவு: மனுஷ் நந்தன் இசை: சுஷின் ஷியாம் எடிட்டிங்: மகேஷ் நாராயணன், ராகுல் ராதாகிருஷ்ணன் கலை இயக்கம்: ஷாஜி நடுவில், ஜிபின் ஜேக்கப் ஒலி: விஷ்ணு கோவிந்த் தயாரிப்பு கட்டுப்பாடு: டிக்சன் போடுதாஸ் லைன் புரொட்யூசர்கள்: சுனில் சிங், நிரூப் பின்டோ, ஜஸ்டின் போபன், ஜெஸ்வின் போபன் சிங் சவுண்ட்: வைஷாக் P. V. மேக்கப்: ரஞ்சித் அம்பாடி பாடல் வரிகள்: அன்வர் அலி ஆக்ஷன்: திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மாஃபியா சசி, ரியாஸ் ஹபீப் உடை வடிவமைப்பு: தன்யா பாலகிருஷ்ணன் நடன அமைப்பு: ஷோபி பவுல்ராஜ் முதன்மை துணை இயக்குநர்: லினு ஆண்டனி துணை இயக்குநர்: பேண்டம் பிரவீண் ஸ்டில்ஸ்: நவீன் முரளி VFX: Firefly, Egg White, Ident VFX Lab DI கலரிஸ்ட்: ஆஷிர்வாத் ஹட்கர் விளம்பர வடிவமைப்பு: Aesthetic குஞ்சம்மா டிஜிட்டல் PR: விஷ்ணு சுகதன் மக்கள் தொடர்பு : யுவராஜ் இந்த திரைப்படத்தை Ann Mega Media நிறுவனம் விநியோகிக்கிறது

