52-வது கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் கல்கி ஜெயந்தி விழா ஜூலைமாதம் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை எளிமையான முறையில்நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்ட கோவிட் 19 குறித்த நிலையான வழிகாட்டுதலின்படியும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும்கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1969, ஜூலை 21-ம் நாளில் மனிதன் முதன் முதலாக சந்திரனில் கால்வைத்த அன்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இடி, மின்னலுடனும், அக்கினி ஜூவாலையுடனும் தம்முடைய விஸ்வ ரூபத்தைக் காண்பித்தார். இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் கல்கி ஜெயந்தி விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். கடந்த 52 வருடமாக கல்கி ஜெயந்தி விழாவானது ஸ்ரீ லஹரிகிருஷ்ணா அவர்கள் தோற்றுவித்த இடமாகிய சத்திய நகரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ் விழாவில் ஆன்மீக சொற்பொழிவுபஜனை பாடல்கள்அனைத்து வேதங்களின் ஆராய்ச்சிகூட்டம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நாளும் பைபிள், குர்-ஆன், பகவத்கீதை ஆகிய வேதங்களிலிருந்தும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது. முழு இரவு பிரார்த்தனையும் நடைபெற்றது.

ஜூலை 1-ம் தேதி கொடியேற்றி, ஆசிரமத்தினர் ஸ்ரீமந் நாராயணரின் அன்புக் கொடியை தங்கள் கைகளில் ஏந்தி, ஆசிரமதைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் தொடங்கியது.

15-ம் தேதி வியாழக் கிழமை மாலை 5 மணியளவில் செளந்தர்ய லஹரி இன்னிசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு கல்கி ஜெயந்தி விழா தொடங்கியது.

19-ம் தேதி மண்டலம் மண்டலமாக உணவு சமைத்து உண்டனர்.அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி கூட்டமும் நடைபெற்றது.

21-ம் தேதி பக்தர்கள் அனைவரும் கல்கி ஜெயந்தி தினத்தை சந்தோஷமாக கொண்டாடினர். மதியம் சமபந்தி உணவு உண்டனர்.சிறுவர், சிறுமியர் வேதங்களிலிருந்து மனப்பாடமாக ஒப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு விழா இனிதே நிறைவு பெற்றது.

ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னத்தை உணர்ந்து கொண்டனர். இந்த கல்கி ஜெயந்தி விழாவில் குளிர்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தம்முடைய மகிமையின் பிரசன்னத்தை உணர்த்தினார்.

மேலும் இவ்விழாவில் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், பெயரிடுதல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கல்கி ஜெயந்தி விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தேவாசீர் லாறியின் குடும்பத்தினரும், ஆசிரம நிர்வாகிகளுமாகிய திரு. D. பால் உப்பாஸ் N. லாறி, திரு. D. லியோ பால் C. லாறி ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

நமக்குள் சமத்துவம் வேண்டும் என்றும், ஜாதி, மதம், இனம், மொழி, தேச, சமயமற்ற ஒரு புதிய சமுதாயத்தினை உருவாக்கி, ஒரு குடைக்குள் ஒருங்கிணைத்து, ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற ஐக்கியத்தின் கீழாக ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இன்று வரையிலும் நடைமுறையில் நடத்தி காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

லஹரி ஓம் தத் சத்!

மக்கள் தொடர்பாளர்பாளர்கள்: பாலசந்தர், டால்டன்.