மெகா சூர்யா நிறுவனத்தின் தயாரிப்பில் கிரிஷ், ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண். நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹரி ஹர வீரமல்லு” 17 ஆம் நூற்றாண்டில் மொகலாய பேரரசு நடந்த காலகட்டத்தில் நடக்கும் ஒரு சம்பவமாக இக்கதை புனையப்பட்டுள்ளது. வீரமல்லுவாக நடித்திருக்கும் பவன் கல்யாண் சின்னஞ்சிறு திருட்டுத் தொழில் செய்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் ஒரு திருடனாக இருக்கிறார். நவாப்புகளிடமிருக்கும் வைரங்களை கொள்ளையடிக்கிறார். அப்படி ஒரு நவாப்பிடம் கொள்ளையடிக்கும்போது பவன் கல்யாண் பிடிபட்டுக் கொள்கிறார். ஆனால் அந்த நவாப் பவன் கல்யாணுக்கு தண்டனை கொடுக்காமல் அவ்வரங்க்சீப்பிடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை கொள்ளையடித்து கொடுத்தால் அதிகளவு பணம் தருவதகாக கூறுகிறார். இதற்கு உடன்பட்ட பவன் கல்யாண் அவ்வுரங்கசீப்பாக நடிக்கும் பாபிதியோலிடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை கொள்ளையடிக்க புறப்படுகிறார். வைரத்தை கொள்ளையடிப்பதுமட்டுமல்லாமல் வேரொரு நோக்கத்திற்காகவும் செல்கிறார். அது என்ன நோக்கம்? அவ்வரங்கசீப்பிடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை பவன் கல்யாண் கொள்ளையடித்தாரா இல்லையா? என்பதுதான் கதை. பவன் கல்யாணுக்காக மட்டுமே படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தனிமனித ஆட்சிபோல் திரைக்கதையை ஓட்டியிருக்கிறார்கள். அரசியல் பின்னிப்பிணைந்திருக்கிறது. தனது கதாபாத்திரத்தோடு ஒன்றென கலந்துவிட்டார் பவன் கல்யாண். நிதி அகர்வால் அழகாக வந்துபோகிறார். வில்லனாக்கப்பட்ட பாபி தியோலின் நடிப்பு அபாரம். 17 ஆம் நூற்றாண்டு காலத்தை கண்முன் காட்டியிருக்கிறார்கள் அரங்கு வடியமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும். அவ்வள்வு நேர்த்தியாக உள்ளது. பார்வையாளர்கள் அனைவரும் 17 ஆம் நூற்றாண்டில் இருப்பதுபோல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. கிரவாணியின் இசை படத்துக்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. இயக்குநர் கிரிஷ் ஜோதிகிருஷ்ணா ஒரு வரலாறை திரையில் காட்டியிருக்கிறார்.
“ஹரி ஹர வீரமல்லு” திரைப்பட விமர்சனம்
