கே ஜே ஆர். நாயகனாக நடிக்கும் படம் பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது

‘அங்கீகாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான *கே ஜே ஆர்*- கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் ‘ புரொடக்சன் நம்பர் 15’ எனும் பெயரில் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது.  ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கே ஜே ஆர், அர்ஜுன் அசோகன், ஸ்ரீ தேவி, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் குமார், பிருத்வி ராஜ், இந்துமதி , அஸ்வின் கே. குமார், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் , அஜூ வர்கீஸ் , ஸ்ரீகாந்த் முரளி  உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் பி. வி. சங்கர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு *ஜிப்ரான்* இசையமைக்கிறார்.  மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினராக தமிழக பி.ஜே.பி. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்******

நடிகர் *கே ஜே ஆர்* நடித்திருக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்திற்கான பூஜையுடன் படபிடிப்பு தொடங்கி இருக்கிறது