புத்தர் பற்றி சொல்லியிருக்கும் விசயம் பெரிதாக பேசப்படும். – நடிகை ரக்‌ஷிதா

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம்  “99/66” இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.  கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகை ரக்சிதா மகாலட்சுமி பேசியதாவது: “உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோரும் என் ரசிகர் மன்ற தலைவர் என சொல்லிக்கொள்வது மிகப்பெரிய மகிழ்ச்சி. புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். படபிடிப்பு மிக ஜாலியாக இருக்கும். மூர்த்தி சார் மிக நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி” என்றார்.*******

இயக்குநர் தயாரிப்பாளர் மூர்த்தி பேசியதாவது.: “நான் சினிமாவுக்கு புதியவன் எனக்கு தெரிந்ததை என் அறிவை வைத்து, மிக எளிமையாக இப்படத்தை எடுத்துள்ளேன். படம் பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.  அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் – சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படக்குழு படமாக்கியுள்ளது.மற்றும் படத்தில் AI-CG –  காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர். பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு நிறுவனம் – மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட். கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.