“யோலோ” திரைப்படம் செப்.12ல் வெளியீடு

மிஸ்டர் மோஷன் பிக்சர்ஸ்  சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ். சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் காதல் மற்றும் நகைச்சுவை  கலந்த பொழுதுபோக்கு படமக  உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.  வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெள்ளோட்டம் விடப்பட்டது இந்நிகழ்வில்  தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது:  எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும் தேவ் நடிகர்களாக இல்லாமல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள்.******

எனக்குப் பலமாக இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார் நிறைய அறிவுரைகள் தந்தார். Generous Entertainment நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. செப்டம்பர் 12 அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.