ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின் பதாகை வெளியீடு

ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா  இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான  “பெத்தி” படத்தின்,  முதல் பதாகை ரசிகர்களிடம்  வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் விருத்தி சினிமாஸ் சார்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இந்தப் படம் உருவாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் இப்படத்தில்  நாயகியாக நடிக்கிறார். தற்போது ராம் சரண் மற்றும் சண்டை கலைஞர்கள் பங்கேற்க ஒரு முக்கியமான, அதிரடி நிறைந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் என்ற முறையில் கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரும்  இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஹைதராபாத் அலுமினியம் பேக்டரியில், கலை இயக்குநர் அவிநாஷ் கொல்லா அமைத்துள்ள அரங்கில் இந்த  காட்சிகள் படமாகி வருகிறது.  சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.********

பாலிவுட் ஸ்டார் விக்கி கௌஷலின் தந்தை மற்றும் தங்கல் போன்ற பல படங்களுக்காக பிரபலமான ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் இந்த அதிரடி சண்டைக்காட்சிகளை மேற்பார்வை செய்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக நவகாந்த் பணியாற்றுகிறார். இந்த சீன் படத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருப்பதால், மிக பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது. பெர்பெக்சனுக்கு பெயர் பெற்ற இயக்குநர்  புஜ்ஜி பாபு சனா ஒவ்வொரு ஆக்சன் காட்சியையும் மிக அதிக கவனத்துடன், தனித்துவமான அணுகுமுறைகளில் வடிவமைத்து வருகிறார். பெத்தி படத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “சிக்கிரி சிக்கிரி ” பாடல் 110 மில்லியன் பார்வைகளை கடந்து உலகம் முழுவதும் அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய சார்ட் பஸ்டர்களில் ஒன்றாகவும் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, R ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார். “பெத்தி” படம் வரும்  2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது.

தொழில்நுட்பக் குழு : இயக்கம், திரைக்கதை: புஜ்ஜி பாபு சனா வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா இசை: A.R. ரஹ்மான் ஒளிப்பதிவு: R. ரத்னவேலு கலை இயக்கம்: அவிநாஷ் கொள்ள படத்தொகுப்பு: நவீன் நூலி நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார் மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ மக்கள் தொடர்பு : யுவராஜ்.