தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாநில விரோதச் செயலை கண்டித்து 26.01.2022-ஆம் தேதி – புதன் கிழமை காலை 10 மணிக்கு, 43-செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தி.நகர், சென்னை – 600 017 முகவரியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில அலுவலக வளாகத்தில் தோழர். இரா.நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்.இரா.முத்தரசன் உள்பட முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
தங்களன்புள்ள,

(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு