“டூயூட்” திரைப்பட விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார்,  மமிதா பைஜூ, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டூயுட்”. அமைச்சர் சரத்குமாரின் தங்கை மகன் பிரதீப் ரங்கநாதன். சரத்குமாரின் மகள் மமிதா பைஜூ. இருவரும் குழந்தை பருவத்ஹிலிருந்தே ஒன்றச்க வளர்ந்து வருகிறாகள். பருவம் அடைந்ததும் மமிதா பைஜூ,  பிரதீப் ரங்கநாதனிடம் தன் காதலை சொல்லி தன்னை திருமணம் செய்துகொள்ளுபடி கேட்கிறார். உன்மீது காதல் உணர்வு எனக்கு ஏற்படவில்லை என்று பிரதீப், மமிதாவின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார். சிலகாலம் கழித்து பிரதீப்பின் மனக்குரங்கு காதல் மரத்தில் தொத்தி ஏறுகிறது. உடனே மமிதாவிடம் சென்று இப்போது உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் எனறு பிரதீப் கேட்கிறார். ஆனால் “நான் இப்போது வேறு ஒருவனை காதலிக்கிறேன்  அதற்கு என் தந்தை சரத்குமார் எதிர்ப்பு தெரிவிப்பதால் நீதான் என்னை என் காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும்” என்று பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கிறார். இதற்கு பிரதீப். ரங்கநாதன் எடுக்கும் முடிவுதான் இப்படத்தின் கதை. படம் முழுக்க பிரதீப் ரங்கநாதனின் ஆக்கிரமிப்புதான். நகைச்சுவையிலும் விறுவிறுப்பிலும் பார்வையாளர்களை உற்சாகத்துடன் படத்தை ரசித்து மகிழும்படி நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். பிரதாப்பிற்காகவே படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். திரையரங்கம் முழுக்க சிர்ப்ப்லைகள் வீசுகிறது. சரத்குமாரின் வில்லத்தனம் பளிச்சிடுகிறது. நகைச்சுவையும் தனது நடிப்பால் வெளிபடுத்துகிறார் சரத்குமார். இப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சாதி வெறியின் கொடூர முகத்திற்கு மிருதுவான அரிதாரப்பூச்சுடன் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பாராட்டுதலுகுரியவர்.