பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் இந்திய படத்திற்கு “ஃபௌசி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க உருவாகும் இந்தப் படத்திற்கு “ஃபௌசி” எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. உறுதியான, அழகிய வடிவமைப்பில் இருக்கும் தலைப்பு வடிவைப்பு, வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் பதாகையில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர்களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன.
பிரபாஸ் நடிக்கும் புதிய படம் “ஃபௌசி” அதிகாரப்பூர்வமாக வெளியானது
