திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா ராமையன் பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் விவசாயத்திற்கு செல்லும் நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து பாரடைஸ் சிட்டி என்கிற பெயரில் வீட்டுமனை குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது, இந்த பகுதியில் ரெவென்யூ அதிகாரிகள் உரிய ஆய்வு செய்துநீர்வழிப்பாதைகளை மீட்டெடுக்கவும், உரிய ஆய்வு செய்து பேரடைஸ் சிட்டி நகருக்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவிற்கான அனுமதியினை ரத்து செய்திட கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை மாநில தலைவர் வே.ச. முத்துக்குமார் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் முரா. செல்வகுமரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் பாண்டியன் மற்ற நிர்வாகிகள் மகாராஜன், பிரதாப்,மகேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீர்வழிப்பாதையில் வீட்டுமனைக்கு எதிர்ப்பு
