காவல்த்துறை துணை ஆணையருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருது

ஊரக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் பிரசன்ன குமார்,இ.கா.ப.க்கு முதலமைச்சரின் “நல்லாளுமை விருதை” தமிழக அரசு அளித்தது. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் புதிய உத்திகளைக் கையாண்டு, பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் அலுவலர்கள் மற்றும் அமைப்புகளைப் பாராட்டி, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சரால் “நல்லாளுமை விருது” வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது பெறுவோர் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் ஆற்றிய ஊரக மேம்பாட்டுப் பணிகளுக்காக, திருநெல்வேலி மாநகர மேற்குப் பகுதி காவல் துணை ஆணையர் டாக்டர் வி. பிரசன்ன குமார், இ.கா.ப., தலைமையிலான குழுவினருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருது அளிக்கப்பட்டது.