ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் மலைசாமி ஏ எம் ராஜா நடித்திருக்கிறார். மர்மம் நிறைந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தை பாலு இயக்கியுள்ளார். ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் பதாகையை இயக்குநர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வெற்றி, காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா ஆகியோர் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டனர்.*****
படம் குறித்து தயாரிப்பாளர் மலைசாமி ஏ எம் ராஜா கூறும்போது, “ஒரு நிறைவான பட்ஜெட்டில் தரமான படமாக ‘போலீஸ் ஃபேமிலி’ உருவாகியுள்ளது. படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் எல்லாமே இதில் கலந்து இருக்கும். ஒரு காவல் நிலையத்தில் காவலர்கள் எப்படி பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு வரக்கூடிய சில எதிர்ப்புகள் பிரச்சனைகளால் அவர்களுடைய குடும்பம் எப்படி தொந்தரவுக்கு ஆளாகிறது, அதை எப்படி அவர்கள் சாதுரியமாக கையாண்டு வில்லனிடம் இருந்து மீண்டு வருகிறார்கள், அதில் என்ன இழப்பைச் சந்திக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த போலீஸ் ஃபேமிலி படம் உருவாகி உள்ளது.
இயக்குநர்கள் சசிகுமார் பாண்டியராஜ் உள்ளிட்ட ஆறு பிரபலங்களும் ஒரு மனதாக பாராட்டி உடனடியாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சம்மதித்து தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு எங்களது நன்றி,
இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ என்கிற டைட்டில் அதுவாகவே கதையைத் தேடி வந்துவிட்டது.. படம் பார்க்கும்போது கதையில் அதற்கான நியாயம் இருப்பதை உணர முடியும். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளோம்” என்று கூறினார்.
*தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்* இசை ; ஜெயா கே.தாஸ் ஒளிப்பதிவு ; ஜெயக்குமார் தங்கவேல் படத்தொகுப்பு ; எம்.எஸ் செல்வா சண்டைக்காட்சிகள் ; டிராகன் ஜிரோஷ் பாடல்கள் ; கே.மகாமுனி, சோ.பா மணி, வசந்த் ஒப்பனை ; வினோத் மக்கள் தொடர்பு ; A. ஜான்