பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகி அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள்.அது ‘செலிபிரிட்டி ஷோ ‘என்று அழைக்கப்படும். திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு திரைப்படம் என்பது சாமான்ய பார்வையாளர்களை எந்த அளவிற்குப் போய்ச் சேர்கிறது, எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வெகுஜன மக்களின் மன நிலை என்ன என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ‘பரிசு’ திரைப்படத்தைக் கல்லூரி மாணவிகளுக்குத் திரையிட்டுக்காட்டியுள்ளனர். சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது. ஜெய் பாலா, கிரண் பிரதீப், நடித்துள்ளார்கள். மேலும் ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு, பேய் கிருஷ்ணன், ஆகியோரும் நடித்துள்ளனர்.திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார் கலா அல்லூரி. வரும் அக்.31ல் இப்படம் திரைக்கு வருகிறது.*****
‘பரிசு’ திரைப்படம் அக்.31ல் வெளியீடு
