உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை, நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை உலக நுகர்வோர் உரிமைகள் தினமான மார்ச் 15, 2025 சென்னையில், நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து மானக் மந்தன் எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.  பிஐஎஸ் சென்னைக் கிளை அலுவலகத்தின் இயக்குநரும் தலைவருமான ஜி. பவானி, திரைப்பட இயக்குநர் என். லிங்குசாமி  இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். நுகர்வோர் உரிமைகள், பிஐஎஸ் சான்றிதழ், தரங்களின் முக்கியத்துவம் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும்  வகையில் விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. பிஐஎஸ்-ஸின் முன்முயற்சிகள், நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள், சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் நன்மைகள் ஆகியவை பற்றிய மதிப்புமிக்க தகவல்கள் இதில் எடுத்துரைக்கப்பட்டன. ஹால்மார்க்கிங், தர உத்தரவாதம் குறித்த தகவல்களை நுகர்வோருக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட விவாதங்களும் இதில் இடம்பெற்றன