பி.ஐ.எஸ் சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, இன்று (ஏப்ரல் 11, 2025) பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக் கடையில் அமலாக்கத் தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பி.ஐ.எஸ் அதிகாரிகள் குழு நடத்திய இந்த நடவடிக்கையின் போது, இயக்குநர்கள் டி.ஜீவானந்தம், முனிநாராயணா. ஆர், இணை இயக்குநர் ஸ்ரீஜித் மோகன்.ஜே, துறை அதிகாரி ஹரீஷ் சம்பத் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பி.ஐ.எஸ் ஹெச்.யு.ஐ.டி முத்திரை இல்லாமல் போலி ஹால்மார்க்கிங் செய்யப்பட்ட ரூ.4.8 கோடி மதிப்புள்ள 5.4 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படுவதற்கு முன்பு, தங்க நகைகள் ஹெச்.யு.ஐ.டி உடன் ஹால்மார்க் செய்யப்பட வேண்டும் என்பதால், அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பண்ருட்டி நகைக் கடையில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் சோதனை – 5.4 கிலோ தங்கநகை பறிமுதல்
