முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கிறார். இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை டி.ராஜவேல் எழுதி இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தை பிளேஸ்மித் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார். இவருடன் இணைந்து இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி உள்ளார். ராஜேஷ் முருகேசன் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார் .********
படத்தின் மையக்கரு ஒரு அபார்ட்மெண்டை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும் , மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையிலும் , *படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி, ஹாரர் என அனைவரும் விரும்பி பார்க்கும் வகையிலும் , குடும்பமாக சென்று ரசிக்கும் வகையிலும் *படமாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன .கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது .