“கஜானா” திரைப்பட விமர்சனம்

பிரபாதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் “கஜானா” திரைப்படத்தில் இனிகோ பிரபாகரன், பிதாப் போத்தன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வேலு பிரபாகரன், பிஜாரன் சுர்ராவ், ஹரீஷ் பெரடி, வேதிகா, சாந்தனி தமிழரசன், மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த நாகமலையில் புதைக்கப்பட்டிருக்கும் புதையலைத்தேடி இனிகோ பிரபாகரன் தன் நண்பர்களுடன் செல்கிறார். அந்த புதையலை யாழி என்ற பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கினம் (கோயில் தூண்களில். சிங்கம் யானை குதிரை இம்மூன்றும் கலந்த ஒரு உருவத்தில் யாழியின் சிலை செதுக்கப்பட்டிருக்கும்.) பாதுகாத்து வருகிறது. அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியது இல்லை. அமானுஷ்ய சக்தி நிறந்த்த ஒரு மாயாஜால காடு. அங்குதான் கதாநாயகன் இனிகோ பிரபாகர்ன்தன் ந்ண்பர்களுடன் செல்கிறார். சென்றவர்கள் உயிருடன் திரும்பி வந்தார்களா? புதையலை எடுத்தார்களா? என்பதுதான் கதை. பிரதாப் போத்தன் தொல்லியல்த்துறை வல்லுனராக நடித்திருக்கிறார். நாகமலையின் ரகசியத்தையும் புதையலின் வரைபடத்தின் ஒரு பகுதியையும் வைத்திருக்கும் பிரதாப்போத்தன் இனிகோவிடம் பேசும்போது அச்சத்தின் வரிகோடுகளை நெற்றியில் கச்சிதமாக படரவிடுகிறார். எழுத்தாளராக வரும் ஹரீஷ் பெரடி தனக்கே உரித்தான கட்டை குரல் வசனத்தில் அச்சத்தையூட்டும் வகையில் வேதிகாவுடன் போசுவதை ரசிக்க முடிகிறது. வேதிகாவுக்கு சொல்லும்படியான காட்சி அமைப்புகள் இல்லை. ஒரே அறைக்குள் இருந்து கொண்டு ஹரீஷ் பெரடியின் பேச்சை கேட்பதும் அவர் எழுதிய நாகமலையின் தொடரை படிப்பதும்தான் அவருக்கு கொடுத்த வேலை. அதை சிறப்பாக செய்துள்ளார். காட்டுக்குள் யோகிபாபுவும் மொட்டை ராஜேந்திரனும்  அடிக்கும் நகைச்சுவை கலாட்டாக்கள் ரசிக்கும்படியுள்ளது. சென்ட்ராயனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து மறைகிறார். பருந்தாக பறந்துவந்து சாத்தானாக காட்சி தரும் சாந்தினி தமிழரசனொடு கஜானாவின் இரண்டாம் பாகத்திற்கு செல்கிறார் இயக்குநர். பாடசாலை விடுமுறை என்பதால் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு ஏற்ற படமாக கஜானாவை தந்துள்ளார் இயக்குநர் பிரபாதீஷ். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக உய்ஹவிருக்கிறது.