கே.பாலசந்தரின் 94வது பிறந்தநாள் விழா

தாதா சாகிப் பால்கே, பத்மஸ்ரீ, டாக்டர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 94 வது பிறந்தநாள் விழா இன்று (09.07.24) ஆழ்வார்பேட்டை, ராஜ் கமல் பிலிம்ஸ் அலுவலக வளாகத்தில் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன்  இதில் கலந்துகொண்டு கே.பாலசந்தர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். கே.பாலசந்தர் அவர்களின் மகள் புஷ்பா கந்தசாமி, மருமகன் கந்தசாமி, தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் யூனியன் பொதுச்செயலாளர் தாசரதி, இயக்குநர்கள் வசந்த்,சரண், மங்கை அரிராஜன், பூவிலங்கு மோகன், பாலசந்தர் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு, பொருளாளர் முகமது இலியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.