மங்காத்தா மூவிஸ் ரவி தயாரிப்பில், ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்டி நடராஜன், சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன், முகேஷ் ரவி, கராத்தே கார்த்து, ஶ்ரீரஞ்சனி, ஷாலினி, வழக்கு எண் முத்துராமன், முத்துராமன், வெற்றிவேல்ராஜன், டி.எஸ்.ஆர்., கோதண்டம் ஆக்யோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கம்பி கட்ன கதை”. இந்த்கியாவுக்கு சொந்தமான கோகிணூர் வைரத்தை கொள்ளையடித்த வெள்ளைக்காரன் அந்த வைரத்தோடு அதே மாதிரியான வேறு ஒரு வைரத்தையும் கொள்ளையடித்து செல்கிறான். ஒரு வைரத்தை இங்கிலாந்து மகாராணிக்கு பரிசாக கொடுத்துவிட்டு மற்றொரு வைரத்தை தானே வைத்த்க் கொள்கிறான். காலப்போக்கில் அந்த வைரம் பல்வேறு இடங்களுக்கு பயணப்ப்ட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வைரத்தை ஒரு அரசியல்வாதி காவல்த்துறையினரின் உதவியுடன் கைப்பற்ற நினைக்கிறார். அரசியல்வாதிக்கு நேரடியாக உதவினால் த்கங்களுக்கு சிக்கல் வரும் என்பத்கினால் அந்த வைரத்தை கொள்ளையடிக்க பலே திருடனான நட்டியிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். கொள்ளையடித்த அந்த வைரத்தை நட்டியே த்கன்னாக வைத்துக் கொள்கிறார். இதை அறிந்த காவல்துறையும் அரசியல்வாதியும் நட்டியை விரட்டுகிறார்கள். இவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் நட்டியும் ஓடுகிறார். இந்த ஓட்டத்தில் நட்டியிடமிருந்த வைரமும் காணாமல் போய்விடுகிறது. காணாமல்போன அந்த வைரத்தை நட்டி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. நித்தியானந்தாவை மனதில் வைத்துதான் இப்படத்தை ராஜநாதன் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவையாகவே செல்கிறது. பொழுதுபோக்குகிற்கு பஞ்சமில்லாமல் படம் ஓடுகிறது. கதாநாயகனின் வில்லத்தனத்துக்கு கச்சிதமாக பொறுந்தி நடித்துள்ளார் நட்டி. நித்தியானந்தாவை நட்டி நினைவுபடுத்தினால் ரஞ்சிதாவை நினைவுபடுத்த்குகிறார் ஶ்ரீரஞ்சனி. நட்டிக்கு சிஷ்யனாக வரும் சிங்கம்புலியின் வாய்மொழியும் உடல்பொழியும் திரையரங்கை அதிரச் செய்கிறது. ஊருக்கு ஒரு மனைவி என்று இல்லாமல், தீவுக்கு ஒரு மனைவி என்ற கலாச்சாரத்தை கோதண்டம் மூலம் புகுத்திருக்கிறார் இயக்குநர். கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் படத்தை ரசித்துவிட்டு வரலாம். இலக்கணமில்லாத சினிமாத்தனம் “கம்பி கட்ன கதை”.
“கம்பி கட்ன கதை” திரைப்பட விமர்சனம்
