விக்ரம் படத்தின் வசூல் ரூ. 75 கோடி – உதயநிதி ஸ்டாலின்

ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  கமல் தயாரிப்பில் உருவான படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் படம் குவித்து வருகிறது. மல்டி ஸ்டார்களைக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டதாலும், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததாலும், விக்ரம் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் படமும் அமைந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. படத்தின் வெற்றி அறிவிப்பு நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின் , டான் பட விழாவில் சில உண்மைகளை பேசியது போல் இங்கும் சில உண்மைகளை சொல்ல வேண்டும். விக்ரம் படம் 3வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. இப்போதே 75 கோடி வசூகாகியுள்ளது என்று அறிவித்தார்***********
விக்ரம் படத்தை முதலில் பார்த்தவன் நான். இடைவேளை முடுஞ்சதும். இந்த மாதிரி ஒரு இடைவேளை எந்த தமிழ் படத்திலும் இருந்ததில்லை என கூறினேன். இந்தப் படம் ஹிட் ஆகும் என நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நினைக்கவில்லை என்றார்.