சென்னை குரோம்பேட்டை 23வது வட்ட திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 3ஆம் ஆண்டு நனைவு நாளில் கலைஞர் அவர்களின் திரு உருவ படத்திற்க்கு மலர் மாலை அனிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது.
அஞ்சலி செலுத்த வந்திருந்த கழக தோழர்களுக்கும் பொது மக்களும் காலை நேரத்திற்கே வந்து விட்டதால் அவர்களுக்கு 23 வது வட்ட கழக செயலாளர் ஆர்.கே.நாகராஜன் வெண் பொங்கல் சிற்றுண்டி வழங்கி கெளரவித்தார். 23வது வட்ட கழக செயலாளர் ஆர்.கே. நாகராஐன் தலைமையில் நடந்த இம்மலரஞ்சலி கூட்டத்தில் 23 ஆம் வட்ட கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உட்பட 23 வது வட்டத்தின் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கலைஞரின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.