16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” படத்தில் ஷேனு நிகாமுடன் நடிக்கிறார். உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும், ஒரு மிரட்டலான பயணமாக உருவாகிறது. இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் சோடா பாபுவாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். “பல்டி” 2025 மலையாள சினிமா ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்தாக உருவாகிறது.*******
2007ஆம் ஆண்டு, நடிகர் மோகன்லாலுடன் நடித்த ஏஞ்சல் ஜான் (Angel John) என்ற திரைப்படத்தின் மூலம் சாந்தனு மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த படம், தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அவர் தமிழ் திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி, வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்தார். வெகுகாலமாகவே அவரது மலையாள திரைப்படத்திற்காக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.