“பைசன்” திரைப்பட விமர்சனம்

சமீர் நாயர், தீபக் செகல் பா.ரஞ்சித், அதீதி ஆனந்த. ஆகியோரின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், அருவி மதன், அனுராக் அரோரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பைசன்”. இது ஒரு உண்மைக்கதையின் தழுவல். மணத்தி என்ற ஊரில் மேல்தட்டு மக்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும் இனவெறியாட்டம் கோரத்தாண்டவம் ஆடுகிறது. கீழ்த்தட்டு மக்கள் தலைவன் பசுபதியின் மகன் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு வீரனாக இருக்கிறார். அவர் கபடி போட்டியில் கலந்து கொள்ளக் கூடாதென்று மேல்தட்டு இனவத்தவன் லால் பல கொலை மிரட்டல்களை விடுக்கிறார். அதற்கு பயந்து பசுபதியும் தனது மகன் துருவ் விக்ரமை போட்டியில் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்க்றார். வறுமை சூழல், ஊரில் நிகழும் வன்முறை, ஒடுக்குமுறை என பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகும் துருவுக்கு  இதில் இருந்து மீள கிடைக்கும் ஒரே வழி கபடி போட்டியில் கலந்து கொண்டு வெல்வதுதான் என கருதுக்றார். பல எதிர்ப்புகளுக்கிடையே துருவ் விக்ரம் எப்படி சாதிதுக்காட்டுகிறார் என்பதுதான் பைசன் படத்தின் கதை. இப்படத்தின் முடிவை ஆரம்பக் கட்டத்திலேயே காட்டிவிட்டதால் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் காட்சிகளின் எதிபார்ப்பின் ஆர்வம் குறைந்து விடுகிறது. மணத்தி கணேசன் கதையை தழுவி, அதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு செய்தி சொல்ல முயன்றிருக்கிறார் மாரி செல்வராஜ். அதன் உள்ளே அமீர், லால் பாத்திரங்கள் மூலமாக சில நிஜ சம்பவங்களை உள்ளே வைத்து வன்முறை பாதை எங்கே சென்று முடியும் என்பதையும் காட்டி இருக்கிறார். துருவ் உடல் அளவில் கடுமையான உழைப்பை கொடுத்திருப்பது, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. இப்படத்தின் மிரட்டலான நடிப்பு பசுபதியுடையதே. ஒரு தந்தையின் பதைபதைப்பு படம் முழுக்க அவரிடம் உணர முடிகிறது. ரஜிஷா விஜயன், அக்கா கதாபாத்திரத்துக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார் அனுபமா தன் காதலை வெளிப்படுத்தும் இடங்களில் ரசிகர்களின் மனதில் இடம் பெறுகிறார். அமீர், லால் கதாபாத்திரங்கள் படத்த்ன் ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறது. மதன், லெனின் பாரதி, அழகம் பெருமாள் ஆகியோரி தங்களின் அனுபவ நடிப்பை திரையில் கொட்டியிருக்கிறாகள். வன்முறை போக்கு, மனிதனின் தற்பெருமை (ஈகோ), சுய கௌரவம் எங்குபோய் முடிவடையும் என்பதை இயக்குநர் மாரி செல்வராஜ் திரையில் ஒரு பாடத்தையே நடத்தியிருக்கிறார்.