சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு – தமிழக சபாநாயகர் மு. அப்பாவு வெள்ளி விழா அறிவிப்புக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை: வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக சென்னை வந்த சாந்திகிரி ஆசிரமத்தின் குருஸ்தானிய சிஷ்யபூஜிதா அமிர்த ஞான தபஸ்வினிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.கேரள அரசின் பிரதிநிதி அனு.பி.சாக்கோ, இந்திய விமான நிலைய ஆணையத்தின்செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளர் கே.கே.ஷோபி, சுவாமி மனுசித் ஞான தபஸ்வி, சுவாமி பக்ததத்தன்ஞான தபஸ்வி, டாக்டர். ஜி. ஆர். கிரண், கே.எஸ். பணிக்கர், கே. சுதாகரன், டி.தினேஷ்குமார், எஸ்.பிரபுகுமார், ஆர்.எஸ். லட்சுமி அஜித், Adv. செல்வி ராஜேஷ், எஸ்.எம்.குருதத், பக்தன், சாந்தி முத்துமணி, டாக்டர். காயத்திரி, மகேஷ் மூர்த்தி, ஜோதி மக்வானா மற்றும் சாகர் மக்வானா ஆகியோர் சிஷ்ய பூஜிதா ஜனனிக்குபூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சாந்திகிரி ஆசிரமத்தின் பொன் மொழியும் நல்வழியுமாகத் திகழ்கின்ற ஆன்மிக குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாசென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அரிதான சந்தர்ப்பங்களில் மிக முக்கியமான இடங்களுக்குமட்டுமே  சிஷ்ய பூஜிதா ஜனனி திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் மைய ஆசிரமத்திலிருந்து வெளியிடங்களுக்கு பயணிப்பது வழக்கம்.  ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பிரமச்சாரிகள், பிரம்மச்சாரினிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர்  இப்பயணத்தில்  சிஷ்ய பூஜிதாவுடன் இணைந்து உள்ளனர். சென்னையில் உள்ள சில குருபக்தர்களின் இல்லங்களுக்கு சென்றபின், ஜனவரி 6-ஆம் தேதி செங்கல்பட்டுமாவட்டம் செய்யூரில் உள்ள கிளை ஆசிரமத்தைச் சென்றடைவார். சிஷ்ய பூஜிதாவின் வருகையுடன்ஆசிரமத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் சென்னையில் தொடங்கும். மதியம் 12 மணிக்கு செய்யூருக்குவந்து சேரும் சிஷ்ய பூஜிதாவை மக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் பூரணகும்பம் வழங்கி வரவேற்பர். பின்னர், தரிசன மந்திரத்தில் ஒளிவிளக்கு ஏற்றியபின் குருவின் தியான மடம்பக்தர்களுக்காகத் திறந்து கொடுக்கப்படும்.

அன்று மாலை 4 மணிக்கு விழாவின் அறிவிப்பு நிகழ்வை தமிழக சபாநாயகர் திரு.மு. அப்பாவு  தொடங்கிவைக்கிறார்.  கொண்டாட்ட நிகழ்வுகளை மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர்  கே.எஸ் மஸ்தான்தொடங்கி வைக்கிறார்.ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு  குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாகுருவின் தியான மடம் மற்றும் தரிசன மந்திரத்தில் ஒளி விளக்கேற்றியபின்,   ஜாதி, மத பேதமின்றி அனைவரும்வந்து கலந்துகொள்ளக்கூடிய பிரார்த்தனை இல்லமாகவும்  இவ்வாசிரம நிறுவனர் நவஜோதி ஸ்ரீ கருணாகரகுருவின் புதுமையான தூய தத்துவத்தை  அடிப்படையாகக் கொண்டு உருவான சாந்திகிரியின் ஒருங்கிணைந்தமையமாகவும்‘  கல்வித் துறையில் புதுமையான சிந்தனைகளை உள்ளடக்கிய கல்வி நிலையமாகவும்விளங்குகின்ற இவ்வெள்ளி விழா வளாகத்துக்கு குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா அடிக்கல் நாட்டுவார்.

காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தை பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார். கேரள மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர். அனில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொள்கிறார். மிசோரம் முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன், பனையூர் பாபுஎம்.எல்., முன்னாள் எம்.பி. விஜிலா சத்யநாத், கோகுலம் குழுமத் தலைவர் கோகுலம் கோபாலன் மற்றும்மாநிலத்திற்கு   உள்ளேயும் வெளியேயுமிருந்து இன்னும் பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி நடைபெறும் விழா நிகழ்ச்சியில் ஆசிரமத்தின் பொதுச் செயலாளர் சுவாமிகுருரத்தினம் ஞான தபஸ்வி அவர்கள் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் தலைவாசல் விஜய், மற்றும் .வி. குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் .வி. அனூபு ஆகியோருக்கு வெள்ளி விழா விருதுவழங்கி சிறப்பிக்கிறார்.

வெள்ளி விழாவையொட்டி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவனந்தபுரம் சாந்திகிரி சித்தமருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா  ஆகியன இணைந்து நடத்தும்மக்கள் நலம்’  என்ற திட்டத்தின் கீழ் இலவச சித்த மருத்துவ  முகாம் மற்றும் மருந்து விநியோகம் நடைபெறும். இந்த  முகாமை பிரபல நடிகர் தலைவாசல் விஜய் அவர்கள் தொடங்கி  வைக்கிறார்.

அன்று மாலையில் தீபஒளி ஊர்வலம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜனவரி 8 மதியம், வழிபாடுமற்றும் பிரார்த்தனைக்குப் பிறகு, சிஷ்ய பூஜிதா திருவனந்தபுரத்திற்குத் திரும்புவார்.