சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, தினேஷ தீனா கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த திரைப்படத்தின் பதாகையை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குநர் கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் தினேஷ் தீனா அனலி படத்தை பற்றி கூறியதாவது, “இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. காட்டு மிருகங்களை விட மிகவும் மோசமானவன் மனிதன் அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால் சேட்டா. ஜான்சி தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி எப்படி இதை முடிவுக்கு கொண்டு வருகிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம் தான் இந்த “அனலி” என்கிறார்.*********
மிக விரைவில் பாடல்கள் மற்றும் திரைப்பட முன்னோட்டம் வெளியிடப்படும் இந்த படத்தில் சைந்தவியின் அழகிய குரலில் ஓர் மழைத்துளியும் என்ற பாடல் மற்றும் அ.பா. ராஜாவின் வரிகளில் வில்லன் பாடல் குஜிலி கும்பா என்ற பாடலும் மிக அருமையாக வந்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில் மிக பிரமாண்டமான செட் அமைத்து படம் பிடிக்க முழு சுதந்திரம் அளித்து படத்தின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே. இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.
*நடிகர்கள்:* சக்தி வாசு தேவன் சிந்தியா லூர்டே குமாரவேல இனியா கபிர் துகான் சிங் அபிஷேக் வினோத் ஜென்சன் திவாகர் சிவா (கிளி) மேத்யூ வர்கீஸ் வினோத் சாகர் ஷிமாலி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பலர்.
*தொழில்நுட்ப கலைஞர்கள்:* தயாரிப்பாளர் – சிந்தியா லூர்டே தயாரிப்பு நிறுவனம் – சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தினேஷ் தீனா நிர்வாக தயாரிப்பு – M.பாலமுருகன் சண்டைப்பயிற்சி – ‘கலை மாமணி’ சூப்பர் சுப்பராயன் ஒளிப்பதிவு – ராமலிங்கம் இசை – DC (தீபன் சக்கரவர்த்தி) கலை இயக்குனர் – தாமு MFA எடிட்டர் – ஜெகன் சக்கரவர்த்தி நடன இயக்குனர் – விக்னேஷ் பாடலாசிரியர்கள் – கபிலன், அ.பா.ராஜா, யாசின் ஷெரிஃப் பாடகர்கள் – சைந்தவி, தீபன், யாசின் ஷெரிஃப், விக்ரம், சிபி மக்கள் தொடர்பு: ஷேக்.

