“ஹவுஸ் மேட்ச்” திரொப்பட விமர்சனம்

சிவகார்த்திகேய்ன் புரடெக்‌ஷன்ஸ் தயாரிபில் டி.ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளிவெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹவுஸ் மேட்ச்”. தர்ஷன் அர்ஷா சாந்தின் பைஜூ இருவரும் புதுமணத் தம்பதிகள். தர்ஷன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கியிருந்தார். திருமணமானதும் அந்த வீட்டிலில் கணவன் மனைவியாக தர்ஷனும் அர்ஷாவும் வாழ்ந்து வருகிறார்கள்.ஆனால் அதே வீட்டில் காளிவெங்கட்டும் அவரது மனைவி வினோதினியும் தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இருகுடும்பத்தார்களுக்கும் ஒருவருக்கொருவர் தெரியாமலே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இருவர் குடும்பமும் அந்த வீட்டில் ஒருவிதமான அமானுஷ்ய சக்தியை உணர்கிறார்கள். அது பேய்யாக இருக்குமோ என்று அஞ்சுகிறார்கள். ஆனால் அது பேய் அல்ல அறிவியலின் பரிணாமம் என்று தெரிய வருகிறது. இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கான காரணம் என்ன?,  அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? என்பதுதான் கதை. தமிழ் திரையுலகம்  இப்படியொரு கதைக்களத்தை இதுவரை கண்டதில்லை. ஒரு புதுமையான் கதைகருவை கையாண்டிருக்கிறார் இயக்குநர் டி.ராஜவேல். ஒரே வீட்டினில் இரு குடும்பங்கள் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளாமல் எப்படி வாழ முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு உச்சக்கட்ட காட்சி மூலம் அமானுஷ்ய சக்தியில்லாமல் அறிவியல் மூலமாக எளிதாக பதிலளித்த இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. படத்திற்குள் மிகப்பெரிய அறிவியல் ஆச்சரியத்தை வைத்திருப்பதோடு, அதை சுற்றி நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி பார்வையாளர்களுக்கு புரியவும் வைத்திருக்கிறார். கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். மிகவும் சவால் நிறைந்த பணியை படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் ஷரேஃப் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். கலை இயக்குநர் என்.கே.ராகுலின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.