ஆர்.பாண்டியராஜன் நடிக்கும் “ரியா தி ஹாண்டட் ஹவுஸ்”

ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்சன் என்.பன்னீர்செல்வம் தயாரித்து வழங்கும்  திகில் படத்தின் பெயர் தான்  “ரியா தி ஹாண்டட் ஹவுஸ்” இந்த கதையின் நாயகனாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் நடிக்கிறார். மேலும் இதில் இயக்குநர் கார்த்திக் சிவன், தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் .இவர்களுடன் ,

யாமினி, மாதவி, டிம்பிள்,வையாபுரி, குமரேசன் ,சிவன் சீனிவாசன் மோகன்பாபு, ‘பிகில்” சின்னமருது மற்றும் ஏ.பி.ராஜ், தங்கபாண்டியன், கானா ரகு, கொடுங்கையூர் கானா சூர்யா ,டோலாக்கு ப்ரவீண் ஆகியோர் நடிக்கின்றனர்.***********
 
பழைய இருட்டுபாளையம் ஊரில்  பேய் வீடு ஒன்று ஊர்மக்களை திகிலில்  இருக்க வைத்தது. அந்த பேய் வீட்டில் உள்ள பொருள் ஒன்றை எடுக்க நண்பர்கள் இருவர் தங்களின் சகாக்களோடு அந்த வீட்டில் நுழைகின்றனர். அதன் பிறகு அந்த வீடும், அந்த ஊரும் அல்லோகலப்படுகிறது. அவர்கள் அந்த மர்மப்பொருளை எடுத்தார்களா? அவர்கள் என்னவானார்கள்? என்பதை கதைக்களமாக்கி
திரில்லுக்கும் திகிலுக்கும் இடையில் காமெடி சரவெடியாய் படத்தை உருவாக்கி வருவதாகவும் , 
உண்மை சம்பவத்தை மைய்யமாகக்கொண்டு எடுக்கப்பட்டது என்றும் அறிமுக இயக்குனர் கார்த்திக் சிவன்  கூறுகிறார். சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள அழகிய இடங்களில் வளர்ந்துவரும் இந்த படத்தில் ரேசம் தாப்பா அறிமுக ஒளிப்பதிளராகவும் ,
சரவணக்குமார் மற்றும் சிவனேசன் உதவி ஒளிப்பதிவாளர்களாகவும் , சத்யா கார்த்திக்  உதவி இயக்குநராகவும்,  கொடுங்கையூர் கானா சூர்யா பாடல்கள் எழுத ஹரிபாபு – சபேஷ் சாலமன் இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். ரமேஷ் ரெட்டி _ கமல் ரெட்டி இருவரும் நடன பயிற்சியையும், சீனு தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
 
ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் என்.பன்னீர்செல்வம் முக்கிய வேடத்தில் நடித்து தயாரிக்கிறார். ” ரியா “தி ஹாண்டட் ஹவுஸ் ” என்ற புதுமையான திரில் பெயரை தனது முதல் படத்திற்கு வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி முக்கிய கேரக்டரில் நடித்து கார்த்திக் சிவன் 
இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 
விரைவில் திரைக்கு வர துரிதமாக வளர்ந்து வருகிறது இப்படம்.
 
விஜயமுரளி
PRO