புற்றுநோய் அவதியிலும் பின்னணி குரல் பேசிய நடிகர் சுப்பிரமணி

புற்றுநோயால் அவதிப்பட்டாலும், கடமை உணர்வோடு பின்னணிம் குரல் பதிவு  பேசிக் கொடுத்தார் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி.  புற்றுநோயால் அவதியுற்று வரும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தான் நடித்திருந்த “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருவதை கேள்விப்பட்டு, இயக்குனர் வீர அன்பரசை தொடர்பு கொண்டு, நான் நடித்த காட்சிகளுக்கு நானே டப்பிங் பேசி தருகிறேன் எனக்கூறி, உடல்நிலை மிகவும் மோசமான நிலையிலையும், டப்பிங் பேசிக் கொடுத்தார்!  படக்குழுவினர் அவரின் உடல்நிலை நலமாக பிரார்த்தனை செய்தனர்.