பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தக்ஷன் விஜய் நடிக்கும் “சினிமா கிறுக்கன்” படத்தை பூஜையோடு, தொடங்கி வைத்தார். தக்ஷன் விஜய் முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கிறார். மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா தயாரிப்பில், தக்ஷன் விஜய் எழுத்தில் உருவாகும் “சினிமா கிறுக்கன்” படத்தை, சமூக சீயோன் ராஜா இயக்குகிறார். கதாநாயகன் தக்ஷன் விஜயின் அப்பாவாக இயக்குனர் ஜி.ம்.குமார் நடிக்கிறார். அம்மாவாக ஜானகி நடிக்கிறார். விஜய் டிவி அமுதவாணன், லொள்ளுசபா ஜீவா, சாகிதா சுகன்யா, விதுஷ்னியா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு வினு பெருமாள், இசை ஷ்யாம், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு சி.பியூலா. தக்ஷன் விஜய் இந்தப் படத்திற்காக தாடி வளர்த்து, புதிய தோற்றத்தில், புதிய பரிமாணத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.******