தீமை, நன்மையை விட மேலோங்கி வளர்கிறது – தனுஷ்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. இந்நிகழ்ச்சியில்  நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் இந்நிகழ்வில் நடிகர் தனுஷ் பியதாவது:  “இது கலிகாலம்-வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது. பரலோகத்திலிருந்து வந்த தெய்வீக தேவதை போல தூய்மையான ஆன்மாவான சேகர் கம்முலாவுடன் பணியாற்றியதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் ஜான்வி நரங் ஆகியோரின் ‘குபேரா’ திரைப்படத்தின் கதை மீதான நிரந்தமான நம்பிக்கை மற்றும் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு காலம் கடந்து நிற்கும் “.

*இயக்குனர் சேகர் கம்முலா*  இயக்குனர் சேகர் கம்முலா பேசும்பொழுது, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தனுஷை “அற்புதமான ஆளுமை” என்று பாராட்டினார். படத்தின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், “குபேரா ஒரு அற்புதமான படம். குபேரா மிகவும் அற்புதமான படம். குபேரா மிக மிக அற்புதமான படம்” என்றார். தனது தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் குழுவின் அயராத முயற்சிக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார், குறிப்பாக ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராமைப் பாராட்டினார், அவர் தனது தலைசிறந்த பணிக்காக   உண்மையிலேயே விருது பெறுவதற்கு தகுதியானவர் என்று கூறினார்.

*நடிகர் நாகார்ஜுனா*  மூத்த நடிகர் நாகார்ஜுனா சென்னை பற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், அடையாறில் பிறந்தது, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தது, சென்னையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு இங்கு தனது வாழ்க்கையைத் தொடங்கியது பற்றி நினைவு கூர்ந்தார். சென்னை ரசிகர்கள் தனக்குக் காட்டிய தொடர்ச்சியான அன்புக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர், ” ‘குபேரா’வுக்குப் பிறகு, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘கூலி’ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது!”