தாயப்பசுவாமி பிலிம்ஸ் சார்பில் தா.ராஜசோழன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’. இதில் கதையின் நாயகியாக பிரின்ஸி நடிக்க, முதன்மையான வேடத்தில் தா.ராஜசோழன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, கோவை ஆறுமுகம், சிறுமி நேத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் பாபு இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கேசவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராம்நாத் படத்தொகுப்பு செய்ய, பழனிவேல் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். கபிலன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, நிரோஷான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எஸ்.எம்.முருகேசன் மேலாளராக பணியாற்ற, காந்தி புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ளார். நா. விஜய் மக்கள் தொடர்பாளராக அறிமுகமாகியுள்ளார். வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தா.ராஜசோழன் பேசுகையில், “நான் ஒரு எழுத்தாளன், கவிஞன். சினிமாவுக்காக நான் கொஞ்சம் நஞ்சம் கஷ்ட்டப்படவில்லை. சினிமாவில் அனைவரும் கஷ்ட்டப்படுவார்கள். ஆனால், நான் சினிமாவில் நுழைவதற்கே ரொம்ப கஷ்ட்டப்பட்டு விட்டேன். பேரரசு சாரிடம் உதவி இயக்குநராக சேர முயற்சித்தேன், ஆனால் அது முடியாமல் போய்விட்டது. சினிமா என்ற கோவிலின் மதில் சுவர் பக்கம் கூட என்னை அனுமதிக்கவில்லை. தருமபுரியில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தேன், அங்கே பணி முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடுவேன், பிறகு மீண்டும் தருமபுரி சென்று பணியாற்றுவேன். குடும்பத்தையும் பார்க்க வேண்டும், இப்படி பல வேலைகள் இருந்தும், சினிமாவுக்காக தொடர்ந்து முயற்சித்து தோற்றுப் போனேன். பிறகு எழுத்துலகில் பயணிக்க தொடங்கினேன். அதன்படி என்னை தமிழ் வாழ வைத்தது. என்னிடம் தமிழ்ச் சங்கங்கள் கவிதை கேட்டார்கள், அனைவரிடமும் கேட்பார்கள், அதுபோல் என்னிடம் கேட்ட போது, நான் அவர்களுக்கு கவிதை எழுதி கொடுத்தேன், அதை அவர்கள் வெளியிட்டார்கள். பிறகு தீர்த்தமலை என்ற சிவன் மலைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். பிறகு மருத்துவ குறிப்பு, கவிதை தொகுப்பு என்று எழுதினேன், அனைத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
குடும்ப சூழ்நிலைக்காக நடத்துனராக பணியில் சேர்ந்தேன், சிறிது காலத்திற்குப் பிறகு வேலையை விட்டு விட்டு ரஜினிகாந்த் போல் சினிமாவுக்கு ஜம்ப் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை. அதேபோல் நடத்துனர் வேலையையும் காப்பாற்றிக் கொள்ள ரொம்ப போராட வேண்டியதாயிற்று. இப்படி வாழ்க்கை போன போது, சினிமா ஆசை என்னை விடவில்லை. எதாவது செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன். இந்த சினிமாவுக்காக என் குடும்பத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நிறைய ஏமாந்திருக்கிறேன், ஆனால் நான் யாரையும் இதுவரை ஏமாற்றவில்லை. உலகத்திலேயே எந்த துறையிலும் கிடைக்காத அனுபவம் எனக்கு நடத்துனர் துறையில் கிடைத்தது. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம் ஆயுள் குறைந்துக் கொண்டே வருகிறது, அதற்குள் எதாவது சாதிக்க வேண்டும். எனவே சினிமாவில் சாதிக்க வேண்டும், என்று முடிவு செய்தேன். அதற்காக இரண்டு குறும்படங்கள் எடுத்தேன். இப்போது ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருப்பதோடு, நடிக்கவும் செய்திருக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. ஆனால், நான் இப்படி ஒரு படத்தை இயக்குவதற்கு ‘ரூபன்’ படத்தின் இயக்குநர் ஐயப்பன் தான் காரணம். நான் இங்கு நிற்க அவர் தான் காரணம். நான் இந்த படத்தை இயக்கினாலும், என்னை இயக்கியது ஐயப்பன் தான், அவர் வயதில் இளையவராக இருந்தாலும், எனக்கு அவர் தான் குரு, அவரை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.
திருக்கோவிலூரில் தமிழ்ச் சங்கத்தில் இருந்து சிறுகதை கேட்டார்கள். அவர்களுக்காக எழுதிய சிறுகதை நல்ல வரவேற்பு பெற்றது. நான் ஓட்டுனராக பணியாற்றும் போது பேருந்தில் பயணிக்கும் சில வாத்தியார்கள் அந்த புத்தகத்தை வாங்கிச் சென்று படிப்பதோடு, பள்ளியில் பாடமாகவும் நடத்துவார்கள். அப்போது தான் இந்த கதையை படமாக எடுக்க முடிவு செய்தேன். பெண் கல்வி மற்றும் போதைப் பழக்கம் இது இரண்டையும் வைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவும் இருந்தால் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் எடுக்க இருக்கிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் ஆட்டுக்குட்டி என்கிற புரூஸ்லி பேசுகையில், “எனக்கு இந்த படத்தில் நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கும் எங்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். அடுத்தடுத்து அவர் படங்கள் பண்ண வேண்டும், எங்கள் ஐ.ஏ.எஸ் கண்ணம்மா படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
மக்கள் தொடர்பாளர்கள் சங்க செயலாளர் ஜான் பேசுகையில், “நடத்துனர் பணி என்பது மிக முக்கியமான பொறுப்பாகும். அப்படிப்பட்ட பணியில் இருந்து இயக்குநராக வந்திருக்கும் ராஜசோழன் சாருக்கு வாழ்த்துகள். பி.ஆர்.ஓ தம்பி விஜய், அவருக்கு நான் குரு அல்ல, யாருக்கும் யாரும் குரு சிஷ்யன் அல்ல, அனைவரும் அண்ணன் தம்பி தான். அவர்களாகவே தான் கற்றுக் கொள்ள வேண்டும். பி.ஆர்.ஓ-வாக கார்டு எடுப்பது முக்கியம் அல்ல, படம் பண்ண வேண்டும், அது தான் முக்கியம். இங்கு பின்னாடி பேசுபவர்கள் நிறை பேர் இருக்கிறார்கள். நல்லதுக்கு காதை திறந்து வை, கெட்டதுக்கு காதை மூடி வை. இவை இரண்டுக்கும் செவி கொடுக்காமல் பயணித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். எனக்கு பின்னாடி நிறையப் பேர் பேசுகிறார்கள், ஆனால் என் முன்னாடி பேசினால் அதற்கு தீர்வு காண முடியும். பின்னாடி பேசுவதை நாம் கண்டுக்கொள்ள கூடாது. எனவே, குறை சொல்பவர்களை பற்றி கவலைப்படாமல் பயணிக்க வேண்டும்.
ஐ.ஏ.எஸ் பணிக்கு சுமார் 2000 பெண்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இத்தனை வருடங்களில் இவ்வளவு பெண்கள் தான் இந்த பதவிக்கு வந்திருக்கிறார்களா? என்றால் அது அப்படி தான். இன்னும் நிறைய பெண்கள் இந்த பதவிக்கு வர வேண்டும். அதேபோல் கல்வியில் தோற்றுப்போனவர்கள் தோல்வி அடைந்தத்தாக நினைக்க வேண்டாம். கல்வி இல்லை என்றால் அடுத்த துறையில் சாதிக்க முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளை படி படி என்று சொல்வதை விட படிப்புக்கு அடுத்தப்படியான விசயங்களை சொலி வளர்க்க வேண்டும். அனைவரும் அரசாங்க வேலை, உயர் பதவிகளுக்கு முயற்சிக்காமல் தொழில் முனைவர்களாக உருவாக வேண்டும், அதற்கு ஏற்றவாறு பிள்ளைகளை வளர்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த குழுவில் பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் கேசவன், இசையமைப்பாளர் அரவிந்த பாபு, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராஜசோழன், பி.ஆர்.ஓ நா.விஜய் என அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் பேரரசு போசுகையில், “