நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் ஜூலை மாதம் வெளியீடு

பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “அந்தகன்”. இந்தப்படத்தை அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, லீலா தாம்ஸன், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, மனோ பாலா, பெசன்ட்நகர் ரவி, மோகன், வைத்யா, ஜெயம் எஸ்.கோபி, செம்பலர் உள்பட நடிகர்-நடிகைகள் நடிக்கிறார்கள்.  இப்படம் வருகிற ஜூலை மாதம் 1ஆம் தேதி உலகெங்கிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.*********

“அந்தகன்” படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது, இந்தியாவில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற “அந்தாதுன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்”. படத்தின் கதாநாயகன் ஒரு பியோனா கலைஞர் ஆவார். பியானோ பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற பிரசாந்த் இந்த படத்தில் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய தியாகராஜன் கடும் போராட்டத்துக்கு பிறகு இதன் தமிழ் உரிமையை பெற்றுள்ளார். ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும் என்றால் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில் பிரசாந்த் பியானோ வாசித்தார்.

அந்த இசையில் மயங்கிய படக்குழுவினரும், நடனம் அமைத்த கலா மாஸ்டரும் தங்களை மறந்து கைதட்டி பரவசம் அடைந்து போனார்கள். அந்தளவு பியானோவில் பிரசாந்த் வியப்பூட்டுகிறார். படத்தின் மிகப்பெரிய பலம் அதுதான். வித்தியாசமான திகில் திரில்லர் கதையாக இந்த படம் தயாராகி இருக்கிறது. ரசிகர்கள் இந்த படத்தை நிச்சயம் விரும்புவார்கள். ஆதரவு தருவார்கள். “அந்தகன்” படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். வருகிற ஜூலை 1-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது என படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.