தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள்  “உலக சுற்றுலா தினத்தையொட்டி” சேலம. மாவட்ட ஆட்சியரகத்தில்  விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து சேலம் – ஏற்காடு வனத்துறை சோதனைச்சாவடியில் ஏற்காட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர்  செய்தியாளர்களிடம. தெரிவித்ததாவது: “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறுதிட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறைக்காக ரூ.700 கோடிநிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி சர்வதேச அடிப்படையிலான பல்வேறு வசதிகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் மற்றும்  மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்பட. சுற்றுலாத்துறையிலும் முதலீட்டாளர்களை ஈர்க்கின்ற வகையில் சுற்றுலாத்துறையின் மாநாடு சென்னையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்சுற்றுலாத்துறைக்கென தனியாக ஒரு கொள்கையை உருவாக்கி தந்துள்ளார்கள். எனவே சுற்றுலாத்துறை மேம்பட்டிருப்பதற்கும், சிறந்து விளங்கி வருவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் சிறப்பான திட்டங்களே காரணமாகும். 2025 உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 அன்றுஅனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின்கருப்பொருள், “சுற்றுலாவும் நிலையான மாற்றமும்” (Tourism and Sustainable Transformation) ஆகும். இந்தக்கருப்பொருளின் முக்கிய நோக்கம், சுற்றுலாவை ஒருநேர்மறையான மாற்றத்திற்கான காரணியாக மாற்றுவதாகும். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளின் மூலம்மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக சுற்றுலாதினத்தையொட்டி, இன்றையதினம் பொதுமக்கள், கல்லூரிமாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி மாவட்டஆட்சியரகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், சுற்றுலாதினத்தையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.   இதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்தவிழிப்புணர்வினை வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினர்உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன்சேலம் – ஏற்காடு வனத்துறை சோதனைச்சாவடியில்ஏற்காட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளுக்குவனத்துறையின் சார்பில் மரக்கன்றுகளும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மஞ்சப்பைகளும்வழங்கப்பட்டது. அதேபோன்று, பொதுமக்களும் தங்கள் வீடுகளைச்சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்துபராமரித்து, தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்றிடஅனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.