மனுஜோதி ஆஸ்ரமத்தின் ஹிந்தி இசைத்தட்டு வெளியீடு – பால் உப்பாஸ் லாறி

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக “ஓம்கார் ஸ்வரூப் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அம்ரித் கீதாயன்” என்ற ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. மேனாள் IASஅதிகாரி ஸ்ரீராம் திவாரி  வெளியிட கலைத்துறையை சேர்ந்த முனைவர்.அகிலா மிஸ்ரா முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸ்  இரண்டாம் பிரதியை பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், மற்றும் பத்திரிகை நண்பர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். தெலுங்கானா  மாநிலத்தில் உள்ள ஸ்ரீ லஹரிகிருஷ்ணாவின் பக்தர்கள் பலர் விழாவில் பங்கேற்றுக் கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடை மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி சிறப்பாக செய்திருந்தார்.