மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கோட்பாடுடைய திருநெல்வேலி மாடட்டம் முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு ஜூலை திங்களில் 8 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழாவிற்கு வருகை தருபவர்களுக்கு விருந்தளிக்க இவ்வாண்டு 12 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டிருந்தன. கல்கி ஜெயந்தி விழாவில் முக்கிய விழாவாக கொண்டாடப்படும் மத நல்லிணக்க மாநாட்டிற்கு அனைத்து மத அறிஞ்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட இந்தியாவின் பல மாநிலத்திலிருந்துமட்டுமல்லாமல் மலேசியா பர்மா துபாய் ஜெர்மனி அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற ஆஸ்ரமத்தின் பக்தர்களென சுமார் 6 ஆயிரம் பேர்கள் கலந்து கொள்வார்கள். அறுவடைத் திருநாளை ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் என்.லாறி, மற்றும் லியோ பால் சி.லாறி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.