வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அம்மா கிரியேஷசன் டி.சிவா வழங்கி வெண்பா கதிரேசன் இயக்கத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில்குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்கள் நடித்து வெளிவந்திருக்கும் படம் “நாளை நமதே”. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவதாணுபுரம் பஞ்சாயத்து கிராமத்தில் பட்டியிலன மக்களும் மேட்டுக்குடி மக்களும. வாழ்ந்து வருகிறார்கள். பொது தொகுதியாக இருந்த இக்கிராமத்தில. மேட்டுக்குடியினர் பஞ்சாயத்து தலைவராக இருந்தும் பட்டியிலனத்து மக்களுக்கு ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த தொகுதியை பட்டியலின மக்களுக்காக தனித் தொகுதியாக அரசு அறிவிக்கிறது. வேட்புமனு தாககல் செய்ய பட்டியிலன தியாகி தன் நண்பர்களுடன் வரும்போது அவர்கள் அனைவரையும் மேட்டுக் குடியினர் கொடூரமாக வெட்டி கொலை செய்து விடுகிறார்கள். அதனால் பட்டியிலன மக்கள் மனுதாக்கல் செய்ய வராததால் மீண்டும் இந்த தொகுதியை பொதுத் தொகுதியாக அரசு அறிவிக்கிறது. மேட்டுக்குடியினரே பஞ்சாயத்து தலைவராகிறார். கிராமத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனித் தொகுதியாக அரசு அறிவிக்கிறது. இதை பயன்படுத்தி 15 ஆண்டுகளுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்று கொலை செய்யப்பட்ட தியாகியின் பேத்தி மதுமிதா, தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கின்றார். வேட்புமனுவை வாபஸ் வாங்கச் சொல்லி மேட்டுக் குடியினர் கொலை மிரட்டல் விடுக்கிறர்கள். மதுமிதாவை கலங்கப்படுத்தி பதாகைகள் வைக்கிறார்கள். சாணியை கரைத்து அவர் மீது ஊற்றுகிறார்கள். கழுத்தில் மிதித்து கொலைவெறி தாக்குதல் நடத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் அம்மா உள்பட அவரின் இனமக்கள் அனைவரும் வேட்புமனுவை வாபஸ் வாங்கச் சொல்லி மதுமிதாவை வற்புறுத்துகிறாரகள். மதுமிதா வேட்பு மனுவை வாபஸ் வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. இந்த படம் சசிகுமார் நடித்து வெளிவந்த நந்தன் திரைப்படத்தை நினைவு படுத்துவதுபோல் படத்தின் முன்பகுதி அமைந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பகுதிதான் முழுவித்தியாசத்துடன் இருக்கிறது. நான் ஏன் தேர்தலில் நிற்ககூடாது? என்று மதுமிதா கேட்பதுதான் மொத்தபடத்தின் கருவாகும். மதுமிதா படத்தின் முழுக்கதையையும் தன் தோளில் சுமந்து செல்கிறார். விருதுகேற்ற நடிப்பை தந்துள்ளார். இதில் நடித்த அனைத்து நடிகர்களும் மண்ணின் மைந்தர்களாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார்கள். பாட்டுப்பாடி கூட்டம் சேர்க்கும் பாதிரியாரின் நடிப்பு திரையரங்கம் முழுவதும் சிரிப்பலை கேட்கிறது. எழுதி இயக்கியிருக்கும் வெண்பா கதிரேசன், இட ஒதுக்கீடு மூலம், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு அரசியலில் பங்கேற்கவும், தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்பை தட்டிப் பறித்து, தங்களது அதிகார திமிரை அவர்கள் மீது திணிக்க முயற்சிப்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். “உனக்கான அரசியலை நீ பேசாவிட்டால், நீ வெறுக்கும் அரசியலால் நீ ஆளப்படுவாய்” எனற் லெனினின் வாசகங்கள் இப்படத்தின் மூலம் உணரமுடிகிறது
“நாளை நமதே” திரைப்பட விமர்சனம்
